Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது கோலி அனுப்பிய மெசேஜ்.. ரோஹித்திற்கு 2 பக்கமும் வைக்கப்பட்ட செக்.. அணிக்குள் இப்படி ஒரு சிக்கலா?

துபாய்: ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டன் கோலி வேண்டும் என்றே புறக்கணிப்பதாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி நேற்று முதல்நாள் அறிவிக்கப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக இந்திய அணியில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மூன்று அணிக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டு உள்ளார்.

என்ன

என்ன

இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு உள்ளார். மூன்று அணியில் எதிலும் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. காயத்தை காரணம் காட்டி அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம்

காயம்

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் கடந்த சில போட்டிகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடியவில்லை. இதை காரணம் காட்டி தற்போது ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவின் காயம் அவ்வளவு மோசமானது கிடையாது என்றும் கூறுகிறார்கள்.

மோசம் இல்லை

மோசம் இல்லை

ரோஹித் சர்மா காயம் அவ்வளவு பெரிதாக இல்லை. அவர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார். தற்போது பயிற்சியை தொடங்கிவிட்டார். பிளே ஆப் போட்டிக்கு முன்பாக மீண்டும் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார். அவரை வேண்டும் என்றே இந்திய அணியில் புறக்கணித்துவிட்டனர் என்று அவரின் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோலி மெசேஜ்

கோலி மெசேஜ்

கோலி வேண்டும் என்றே ரோஹித்தை நீக்கிவிட்டார் என்று கூறுகிறார்கள். அதாவது ரோஹித்தை நீக்கிவிட்டு.. கே. எல் ராகுலை துணை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். இது கோலி அனுப்பும் மெசேஜ் என்று சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அதாவது, அணியில் இனிமேல் உங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கோலி ரோஹித்திற்கு அனுப்பும் வலுவான செய்தி இது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள் .

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

அதேபோல் ரோஹித்திற்கு இரண்டு பெரிய செக் வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். டிசம்பர் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய தொடர் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், ரோஹித் சர்மா இப்போதே இந்தியா திரும்பி சோதனைகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிகிச்சை மேற்கொண்டு பிட்னஸை நிரூபிக்க வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கு செல்ல வேண்டும் என்றால் இப்போதே இந்தியா சென்று சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவரால் மீதம் உள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆட முடியாது. இதனால் ரோஹித் சர்மா ஒன்று ஐபிஎல்லில் ஆடலாம் அல்லது இந்தியா சென்று தனது பிட்னஸை நிரூபித்து ஆஸ்திரேலிய தொடரில் ஆடலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 28, 2020, 8:36 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+