For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சண்டைக்கு காரணமே அவர்தான்.. விருப்பமின்றி வெளியேறிய ரோஹித்.. விடாமல் சீண்டிய மும்பை.. கோலி விரக்தி!

துபாய்: இந்திய அணியில் தற்போது கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. நேற்று களத்தில் இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. தொடக்கத்தில் இந்த போட்டியில் பெங்களூர் ஆதிக்கம் செலுத்தினாலும் போக போக ஆட்டத்தை மும்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இதில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய மும்பை அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வென்றது.

காயம் எப்படி

காயம் எப்படி

இந்த போட்டியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆடவில்லை. கடந்த மூன்று போட்டிகளாக ரோஹித் சர்மா காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் ஆடவில்லை. இதனால் அவர் தற்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியிலும் தேர்வாகவில்லை. நேற்று இவர் ஒவ்வொரு இடைவெளியிலும் மைதானம் வந்தார்.

மைதானம்

மைதானம்

ஆம் ரோஹித் சர்மாவிற்கு தொடையில் காயம் இருக்கிறது. ஆனால் இவர் ஆட்டத்திற்கு இடையே மைதானத்திற்கு வந்து, மும்பை வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார். வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். சென்னை போட்டியின் போதெல்லாம் மைதானம் வராத ரோஹித் நேற்று பெங்களூர் மேட்ச் என்றதும் மைதானம் வந்தார்.

அறிவுரை

அறிவுரை

இந்த நிலையில் ரோஹித் சர்மா மீது இருந்த கோபத்தைதான் நேற்று கோலி மும்பை வீரர்கள் மீது காட்டினார் என்று கூறுகிறார்கள். ரோஹித் சர்மாவை இந்திய அணியில் எடுக்கவில்லை என்று கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்திய அணியில் ஆடவில்லை. ஆனால் இதற்கு கோலியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கோலி

கோலி

கோலிதான் அரசியல் செய்துவிட்டார். அவரால்தான் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அரசியல் காரணமாகவே சூர்யா குமார் யாதவ் ஆடவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டது. இதனால் கோலி கடுமையான விரக்தியில் இருந்ததாக கூறுகிறார்கள். இதனால்தான் நேற்று கோலி மைதானத்தில் கோபமாக காணப்பட்டார்.

கோபம்

கோபம்

தொடர் விமர்சனங்கள் காரணமாக எழுந்த கோபத்தை எல்லாம் நேற்று கோலி மைதானத்தில் காட்டினார். அதுவும் விமர்சனங்களுக்கு காரணமாக இருந்த சூர்யா குமார் யாதவ் மீது இதனால் கோலி கோபத்தை காட்டினார் என்று கூறுகிறார்கள். உங்களால்தான் எனக்கு கெட்ட பெயர், நான் மட்டுமே வீரர்களை தீர்வு செய்வது போல என்னை குற்றம் சொல்கிறார்கள் என்று கோலி தனது கோபத்தை மைதானத்தில் கொட்டி தீர்த்து உள்ளார்.

சீண்டியது

சீண்டியது

ஆனால் இதற்கு மும்பை வீரர்களும் அடுத்தடுத்து பதிலடி கொடுத்தனர். மோரிஸ் உடன் ஐபிஎல் விதிகளை மீறும் அளவிற்கு பாண்டியா சண்டை போட்டார். குர்னால் விக்கெட் விழுந்ததும் பெங்களூர் வீரர்கள் வேண்டும் என்றே அதிகமாக கத்தினார்கள். பொல்லார்டும் மைதானத்தில் கோபமாக காணப்பட்டார். இதனால் நேற்று போட்டி முழுக்கவே பரபரப்பாக இருந்தது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

நேற்று களத்தில் கோலி நடந்து கொண்ட விதம் காரணமாக கடைசியில் ரோஹித் சர்மா மைதானம் பக்கம் வரவில்லை. கோலியை சந்திக்க மனமின்றி ரோஹித் சர்மா நேற்று பாதியில் வெளியேறி இருக்கிறார். போட்டியில் மும்பை வெற்றியை நெருங்கிய போதே ரோஹித் சர்மா டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார்.

Story first published: Thursday, October 29, 2020, 12:35 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
IPL 2020: What really happened in Mumbai vs Bangalore match yesterday?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+