For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

21 நொடி.. சூப்பர் ஓவருக்கு இடையே மைதானத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண்.. யார் இந்த மிஸ்ட்ரி கேர்ள்

துபாய்: நேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது திரையில் தோன்றிய பெண் ஒருவர் இணையம் முழுக்க வைரலாகி வருகிறார்.

நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. நேற்று முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பின் அதை சேஸ் செய்த பஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.

அதன்பின் முதல் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 5 ரன்கள் எடுத்தது. ஆனால் மீண்டும் மும்பை அணி 5 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரையும் டிரா செய்தது. இதன் காரணமாக மீண்டும் சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் மும்பை அணி 11 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி அதை அதிரடியாக எடுத்து வெற்றிபெற்றது.

சூப்பர் ஓவர்கள்

சூப்பர் ஓவர்கள்

இந்த போட்டி இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை நீண்டது. இதனால் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவே என்ன செய்வது என்று தெரியாமல் டென்ஷன் ஆனார். நகத்தை கடித்தபடி டென்ஷனில் அமர்ந்து இருந்தார். இன்னொரு பக்கம் பிரீத்தி ஜிந்தா போலவே இன்னொரு பெண்ணும் மைதானத்தில் இதேபோல் நகத்தை கடித்தபடி அமர்ந்து இருந்தார்.

அந்த பெண்

அந்த பெண்

இரண்டு சூப்பர் ஓவருக்கும் இடையிலும், அதற்கு முன் கடைசி ஓவரிலும் இந்த பெண்ணை டிவியிலும் காட்டினார்கள். திரையில் மொத்தமாக அந்த பெண் காட்டப்பட்டது 21 நொடிகள்தான். ஆனால் அதில் இவர் கொடுத்த ரியாக்சன் 21 லட்சத்தை தாண்டும். நேற்று நடந்த போட்டியில் 2 சூப்பர் ஓவர்களை பார்த்து ரசிப்பதா இடையில் இந்த பெண் கொடுக்கும் ரியாக்சன்களை பார்த்து ரசிப்பதா என்று பலர் குழம்பி போனார்கள்.

க்யூட் ரியாக்சன்

க்யூட் ரியாக்சன்

நகத்தை கடிப்பது, தலை முடியை இழுப்பது என்று கடைசி நொடியில் டென்ஷனில் இவர் கொடுத்த க்யூட் ரியாக்சன் எல்லாம் வைரலாகி உள்ளது. இவரின் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்ட் ஆன நிலையில் பலரும் இவர் யார் என்று தேட தொடங்கிவிட்டனர். கடைசியில் இவர் துபாயில் இருக்கும் ரியானா லால்வானி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இன்ஸ்டா கணக்குகள்

இன்ஸ்டா கணக்குகள்

இவர் ஏன் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. ரசிகர்கள் இல்லாத போது இவர் மைதானம் வந்துள்ளார் என்றால் அணி நிர்வாகிகளுக்கு உறவாக இருக்க வாய்ப்புள்ளது. இவரின் பின்புலத்தை இணையத்தில் பலரும் தேட தொடங்கி உள்ளனர். வெறும் 21 நொடியில் இவர் பிரபலம் ஆன நிலையில் இவரின் பெயரில் நிறைய பொய்யான இன்ஸ்டா கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது.

புகழ் உச்சம்

புகழ் உச்சம்

ரியானா லால்வானியை விரைவில் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும். இவரின் ரியாக்சன் காரணமாக இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். இவருக்கு மிஸ்டரி கேர்ள் (புதிரான பெண்) என்றும் கூட பெயர் வைத்துள்ளனர். ஒரே போட்டியில் புகழின் உச்சத்திற்கே ரியானா சென்றுள்ளார்.

Story first published: Monday, October 19, 2020, 20:19 [IST]
Other articles published on Oct 19, 2020
English summary
IPL 2020: Who is the mystery girl goes viral in social media after MI vs KXIP match?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+