Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நடந்தது? திடீரென நீக்கப்பட்ட அம்பதி ராயுடு.. தோனி எடுத்த அதிரடி முடிவு.. இதுதான் காரணம்!

சார்ஜா: சென்னை அணியில் தற்போது அம்பதி ராயுடு நீக்கப்பட்டு உள்ளார். இவரின் நீக்கத்திற்கு காரணம் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரை வெற்றியோடு தொடங்கி உள்ளது. சென்னை மும்பைக்கு எதிரான முதல் போட்டியை வென்ற நிலையில் , இன்று ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2020 தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. இதில் டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

நீக்கம் ஏன்

நீக்கம் ஏன்

இந்த போட்டியில் சென்னை அணியில் இருந்து அம்பதி ராயுடு நீக்கப்பட்டு உள்ளார். அம்பதி ராயுடு இடத்தில் சென்னை அணியில் இளம் வீரர் ரூத்துராஜ் கெய்காவாட் இணைந்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வந்தார்.

இன்று இணைந்தார்

இன்று இணைந்தார்

அதிலும் நேற்று மாலையில் நடந்த பயிற்சி ரூத்துராஜ் கெய்காவாட் மிகவும் சிறப்பாக ஆடினார் என்று கூறப்படுகிறது. கடினமான பந்துகளை கூட எளிதாக எதிர்கொள்கிறார். இவர் மொத்தமாக தோனி, பிளமிங் இருவரையும் கவர்ந்து உள்ளார். இதனால் இவர் அணியில் இணைந்துள்ளார்.

ஏன் நீக்கம்

ஏன் நீக்கம்

இதில் அம்பதி ராயுடு நீக்கத்திற்கு காரணம் வெளியாகி உள்ளது. இவர் உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. முழு உடல் தகுதியோடு இவர் இல்லை. இதனால் இவர் அணியில் இடம்பெறவில்லை என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

செம ஆடினார்

செம ஆடினார்

கடந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பார்த்தால், அது அம்பதி ராயுடு மற்றும் டு பிளசிஸ் ஆகியோர். இதில் அம்பதி ராயுடு 71 ரன்கள் எடுத்தார். டு பிளசிஸ் 58 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை எளிதாக இந்த போட்டியில் வென்றது. ஆனால் ,மேட்ச் வின்னர் அம்பதி ராயுடு இந்த போட்டியில் இடம்பெறவில்லை.

Story first published: Tuesday, September 22, 2020, 20:53 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+