தோனி எடுத்த ஷாக்கிங் முடிவு.. பிராவோவை திடீரென்று தூக்கிய சிஎஸ்கே.. என்ன நடந்தது? இதுதான் காரணம்!
அபுதாபி: இன்று சென்னை சூப்பர் கிங்கிசின் ஆடும் 11 அணியில் மிக முக்கியமான வீரரான பிராவோ இடம்பெறவில்லை.
மும்பை அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்த போட்டி இன்று நடக்கிறது. மும்பை அணி மிகவும் வலுவாக இருக்கிறது. இதனால் சென்னை அணியும் மிகவும் வலிமையான அணியை தேர்வு செய்து உள்ளது.

சென்னை அணி
இதை சென்னை அணியின் ஆடும் லெவலின் முரளி விஜய் , ஷேன் வாட்சன், டு பிளசிஸ் , அம்பதி ராயுடு, கெதர் ஜாதவ், தோனி, ஜடேஜா,சாம் குரன், தீபக் சாகர், பியூஸ் சாவ்லா, லுங்கி நிகிடி ஆகியோடு இடம்பெற்று உள்ளனர்.

பிராவோ எப்படி
சென்னையில் அணியில் பொதுவாக பிராவோ எல்லா போட்டிகளிலும் விளையாட கூடியவர். பிராவோதான் சென்னை அணிக்கு கடைசிகட்டத்தில் அதிரடியாக ஆட கூடியவர். அதேபோல் டெத் ஓவர்களில் இவர்தான் எப்போதும் பவுலிங் போடுவார்.

ஆனால் என்ன
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று நடக்கும் போட்டியில் பிராவோ இடம்பெறவில்லை. இதற்கு இரண்டு விதமான காரணம் சொல்லப்படுகிறது. முதல் காரணம் இவருக்கு காலில் அடிபட்டு உள்ளது . சிபிஎல் பைனல் போட்டியில் இவருக்கு காலில் அடிபட்டது.

இதுதான் காரணம்
இதனால் அந்த தொடரின் கடைசி போட்டியில் இவர் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் தற்போது ஓய்வில் உள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் பிராவோ சிபிஎல் தொடர் முழுக்க சரியாக விளையாடவில்லை. இந்த தொடர் முழுக்க அவர் மிக மோசமாக சொதப்பினார்.

மிக மோசம்
இந்த தொடரில் அவர் சொதப்பிய காரணத்தால் சென்னை அணியில் விளையாடுவாரா என்று சந்தேகம் வந்தது. இதனால்தான் தற்போது சென்னை அணியில் இவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ், திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, பேட்டின்சன், ராகுல் சார், டிரெண்ட் போல்ட் , பும்ரா ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications