Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழிவாங்கும் எண்ணம் இல்லை.. முதலில் பவுலிங் எடுத்தது ஏன்? தோனி சொன்ன காரணம்.. மாஸ்டர் பிளான்!

அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்தது ஏன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது. பரம வைரிகளான சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடக்க உள்ளது.

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு பின் இந்திய அணி வீரர்கள் கலந்து கொள்ளும் பெரிய தொடர் ஒன்று இன்று நடக்கிறது. அதிலும் 438 நாட்களுக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வந்து இருக்கிறார்.

டாஸ் வென்றார்

டாஸ் வென்றார்

மும்பை அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்த போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்றதன் மூலம் இந்த போட்டியின் தொடக்கமே சென்னை அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.

சிஎஸ்கே கேப்டன்

சிஎஸ்கே கேப்டன்

இந்த நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்தது ஏன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில், நாங்கள் பவுலிங் தேர்வு செய்து இருக்கிறோம். நேரம் செல்ல செல்ல பனி அதிகம் ஆகும். குளிர் அதிகம் ஆகும். இதனால் குளிரில் பீல்டிங் செய்வது கடினம். அதேபோல் பவுலிங் செய்வதும் கடினம்.

பந்து கஷ்டம்

பந்து கஷ்டம்

குளிர் காரணமாக, பந்து ஈரமாகும். இதனால் பந்து வழுக்கி செல்லும். அதனால் முடிந்த அளவு வேகமாக பவுலிங் செய்ய வேண்டும்.இதனால்தான் பவுலிங் தேர்வு செய்தேன், என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். இது கிரிக்கெட். ஜாலியாக விளையாட வேண்டும். இது ஜெண்டில்மேன் கேம்.

எண்ணம் இல்லை

எண்ணம் இல்லை

அதனால் மும்பை அணியை பழிவாங்கும் எண்ணம் எல்லாம் இல்லை. சாதாரண போட்டிகள் நடக்கும், என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக கடைசி ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 19, 2020, 20:09 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+