Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென வந்து சொன்ன வாட்சன்.. எதுவுமே சரியில்லை.. வருத்தத்தோடு ஓய்வு பெற்றாரா? - நடந்தது என்ன?

துபாய்: ஐபிஎல் தொடர் உள்ளிட்ட லீக் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வாட்சன், மிகவும் வருத்தத்தோடு அந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான வீரரும், பல போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்தவருமான வாட்சன் நேற்று ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த ஐபிஎல் சீசனில் வாட்சன் சரியாக ஆடவில்லை.

இந்த நிலையில் நேற்று வாட்சன் தனது ஓய்வு முடிவை எடுத்தார். ஐபிஎல் மட்டுமின்றி மற்ற லீக் தொடர்களில் இருந்து வாட்சன் ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வருத்தம்

வருத்தம்

வாட்சன் மிகவும் வருத்தத்தோடு தனது ஓய்வு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. வாட்சன் பொதுவாக தான் ஆடும் அணிகளை வெற்றிபெற வைப்பதில் குறியாக இருப்பார். சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசன் பைனலில் இவர் காலில் ரத்தம் வர வர ஆடினார். அதேபோல் தனது பாட்டி இறந்த போதும் கூட.. சிஎஸ்கே அணிக்காக களமிறங்கி தொடர்ந்து இவர் ஆடி வந்தார்.

அணியின் வெற்றி

அணியின் வெற்றி

அணியின் வெற்றிதான் எப்போதும் முக்கியம் என்று இருந்தார். களத்திற்கு வெளியிலும் களத்திற்கு உள்ளேயும் சிஎஸ்கே அணி மீது சென்னை மீதும் அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார். நான் வேறு அணியில் இருந்திருந்தால் என்னை தூக்கி இருப்பார்கள். சிஎஸ்கேவில் இருந்த ஒரே காரணத்தால்தான் எனக்கு இத்தனை முறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிஎஸ்கே அணி எனக்கு குடும்பம் போன்றது, என்று வாட்சன் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில்தான் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிஎஸ்கே அணிக்காக கடைசி கட்டத்தில் சரியாக ஆட முடியவில்லை. அணி தன்னை நம்பிய போதும், வாய்ப்பு கொடுத்த போதும் கூட அணியின் வெற்றிக்கு உதவ முடியவில்லை என்ற விரக்தி வாட்சனுக்கு இருந்துள்ளது.தோனி இந்த தொடரில் பல முறையை வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனாலும் வாட்சன் இந்த வாய்ப்பு எதையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மோசம்

மோசம்

இதனால் அணிக்குள் உதவ முடியவில்லை என்ற விரக்தியில் வாட்சன் இருந்துள்ளார். இதுதான் அவரின் ஓய்வு முடிவிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அடுத்த சீசனில் கண்டிப்பாக தன்னால் சரியாக ஆட முடியாது என்று வாட்சனுக்கு தெரியும். இதனால் ஏலத்தில் தான் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. தனக்கும் சிஎஸ்கே அணிக்கும் தர்ம சங்கடம் ஏற்பட கூடாது என்று வாட்சன் நேற்று திடீரென வந்து ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார்.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

மேலும் அணிக்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அது சிஎஸ்கே அணிக்குதான் நல்லது. தன்னுடைய பேட்டிங்கிலும் எதுவும் சரியில்லை. தோனியும் கோர் குரூப்பை மாற்ற போகிறார். இதனால் நாமாக விலகுவதுதான் சிறந்தது என்று வாட்சன் ஓய்வு முடிவை எடுத்துள்ளார், என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, November 3, 2020, 13:13 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+