Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு செய்வது அநியாயம்.. வேண்டும் என்றே புறக்கணிக்கும் தோனி.. உண்மையில் நடந்தது என்ன? பின்னணி

துபாய்: சிஎஸ்கே அணியில் மூத்த வீரர் இம்ரான் தாஹிர் வேண்டும் என்றே புறக்கணிக்கப்படுகிறார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் புகார் வைக்க தொடங்கி உள்ளனர்.

ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீஸனின் தொடக்கத்தில் உள்நாட்டு வீரர்கள்தான் தொடரில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

ஆனால் போக போக வெளிநாட்டு வீரர்களும் தற்போது இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஆர்ச்சர் தொடங்கி கிறிஸ் மோரிஸ், ஆன்ரிச் வரை பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

சென்னை எப்படி

சென்னை எப்படி

ஆனால் சென்னை அணியில் வெளிநாட்டு வீரர்கள் இந்த முறை பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்தவில்லை. இந்த வருடம் சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆன சாம் கரன் நன்றாக ஆடி வருகிறார். மற்றபடி பிராவோ, வாட்சன், ஹஸல்வுட் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. டு பிளசிஸ் சில போட்டிகளில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

நிலைமை இப்படி இருக்க, சிஎஸ்கே அணியில் நல்ல பார்மில் இருக்கும் இன்னொரு வீரரை அணி நிர்வாகம் பயன்படுத்தாமல் இருக்கிறது. இம்ரான் தாஹிர் இந்த வருடம் நல்ல பார்மில் இருக்கிறார். கடந்த இரண்டு சீசனில் சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார். 2019ல் 14 போட்டிகளில் தாஹிர் 26 விக்கெட் எடுத்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இப்படிப்பட்ட மேட்ச் வின்னருக்கு அணியில் இடம் கொடுக்க தோனி மறுத்து வருகிறார். முதலில் அணியில் பிராவோ காயம் காரணமாக தொடக்கத்தில் விளையாடவில்லை . அவருக்கு பதிலாக தாஹிர் வருவார் என்று கருதப்பட்டது. ஆனால் தாஹிரை தோனி அணியில் எடுக்காமல் சாம் கரனை கொண்டு வந்தார். சாம் நன்றாக ஆடி அணியில் நிரந்தரமாக இடம் பிடித்தார் .

மீண்டும் பிராவோ

மீண்டும் பிராவோ

இந்த நிலையில் மீண்டும் பிராவோ தொடரில் இருந்து காயம் காரணமாக நிரந்தமாக வெளியேறி உள்ளார். ஆனால் அப்போதும் கூட தாஹிருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தோனி தொடர்ந்து ஹஸல்வுட் போன்ற வீரர்களுக்கும், இடையில் லுங்கி நிகிடி போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறார். தோனியின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தோனி வேண்டும் என்றே இம்ரான் தாஹிரை புறக்கணிக்கிறார் என்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தோனி இப்படித்தான் இர்பான் பதான், ஹர்பஜனை அணியில் எடுத்துவிட்டு புறக்கணித்தார். அவர்களை வேண்டும் என்றே கூல்டிரிங் தூக்க வைத்தார். அதேபோல் இப்போது தாஹிரை புறக்கணிக்கிறார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர். தாஹிர் எல்லாம் சிஎஸ்கே மீது உயிரையே வைத்து உள்ளனர். அவரை போய் ஸ்பின் பிட்சில் பயன்படுத்தாமல் இருக்கிறார் தோனி, இதெல்லாம் அநியாயம் என்று பலர் விமர்சனம் வைத்துள்ளனர்.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் இன்னொரு பக்கம் தாஹிரை இறக்க தோனி காத்திருந்தார் என்று கூறுகிறார்கள். பிட்ச் மாறும்வரை காத்திருந்தார். வரும் போட்டிகளில் பயன்படுத்தலாம், பிளே ஆப் நேரத்தில் பயன்படுத்தலாம் என்று நினைத்தார். ஆனால் அந்த திட்டமே தற்போது தோல்வி அடைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இதில் புறக்கணிப்பு எதுவும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 23, 2020, 14:48 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+