Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை கட்டாயப்படுத்த முடியாது.. கறாராக சொன்ன ரோஹித்.. முகம் கொடுக்காத ஹர்திக் பாண்டியா.. என்ன ஆச்சு?

துபாய்: மும்பை அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து கேப்டன் ரோஹித் சர்மா முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் இந்த மேட்ச் நடக்க உள்ளது.

இதில் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி மிக சிறப்பாக விளையாடி, முறையாக திட்டங்களை வகுத்தால் ஒருவேளை மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

எப்படி

எப்படி

இந்த தொடர் முழுக்க மும்பை அணியின் முக்கிய வீரர் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. ஆல் ரவுண்டரான பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இவருக்கு ஐபிஎல் தொடருக்கு முன் காலில் ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில்.. இந்த தொடர் முழுக்க பாண்டியா பவுலிங் செய்யவில்லை.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சியின் போது மட்டுமே பாண்டியா பவுலிங் செய்து வந்தார். எந்த மேட்சிலும் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவே இல்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு என்ன ஆனது, அவர் முழு பிட்னஸோடு இருக்கிறாரா என்று கேள்விகள் எழுந்தது. ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், ரோஹித் சர்மா இதற்கு பதில் அளித்துள்ளார்.

ரோஹித் சர்மா பேட்டி

ரோஹித் சர்மா பேட்டி

இது தொடர்பாக ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில், ஹர்திக் பாண்டியா.. பவுலிங் செய்ய இப்போது விரும்பவில்லை. அவரை பவுலிங் செய்ய சொல்லாதது எங்களின் முடிவு இல்லை. அவரின் சொந்த முடிவு. அவருக்கு லேசான தசை பிடிப்பு உள்ளது. இதனால் பவுலிங் செய்யவில்லை.

விருப்பம்

விருப்பம்

அவருக்கு விருப்பம் இருந்தால் அவர் பவுலிங் செய்யட்டும். அவரை நாங்கள் கட்டாயப்படுத்தி பவுலிங் செய்ய சொல்ல முடியாது. ஒவ்வொரு 2-3 போட்டிக்கு பின்பும் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகிறோம். அவர் பவுலிங் செய்ய விருப்பம் இருந்தால் பவுலிங் செய்யட்டும், என்று ரோஹித் சர்மா உறுதியாக கூறியுள்ளார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஆனால் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடும் எண்ணத்தில் இல்லை என்று கூறுகிறார்கள். இப்போது பவுலிங் செய்தால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது இந்திய அணியில் வாய்ப்பை பறிக்க வாய்ப்புள்ளது என்பதால்.. ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவில்லை. டச் விட்டு போக கூடாது என்பதால் வலை பயிற்சியில் மட்டுமே பவுலிங் செய்து வருகிறார்.

Story first published: Tuesday, November 10, 2020, 14:42 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+