பிரஷர் மேல் பிரஷர்.. இது என்ன வித்தியாசமான காரணமாக இருக்கிறது? இளம் வீரருக்கு செக் வைத்த பிசிசிஐ!
துபாய்: ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டிக்கு பிசிசிஐ அமைப்பு வித்தியாசமான செக் ஒன்றை வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நாளை நடக்க உள்ளது. இந்த தொடரில் நன்றாக ஆடிய வீரர்கள் பலர்.. இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார். அதே சமயம் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக.. இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஏன்
இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்த கமலேஷ் நாகர்கோட்டி, தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 30 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இந்திய அணியின் நெட் பயிற்சியில் பந்து வீசும் வீரராக தேர்வானார்.

தேர்வானார்
வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். கொல்கத்தா அணியில் இவர் நன்றாக பந்து வீசிய நிலையில், இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் திடீரென கமலேஷ் நாகர்கோட்டி நெட் பயிற்சி குழுவில் இருந்து பிசிசிஐ மூலம் நீக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்
இவர் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. இவருக்கு காயம் இல்லை. ஆனால் இவரின் உடல்நிலை பவுலிங் செய்ய ஒத்துழைக்கவில்லை என்று வித்தியாசமான காரணம் சொல்லப்பட்டுள்ளது. இவரால் பவுலிங் செய்யும் பிரஷரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது.

காரணம் இதுதான்
இதனால் இவரை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு உண்மையில் இதுதான் காரணமா என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. பிரஷர் காரணமாக ஒரு வீரர் அணியில் இருந்து நீக்கப்படுவாரா, இவரின் நீக்கத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications