அவர் எப்படி வரலாம்? ரோஹித் செய்த காரியம்.. வேகமாக நடுவரிடம் ஓடிய கும்ப்ளே..சூப்பர் ஓவரில் விதிமீறல்?
துபாய்: நேற்று மும்பை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்று, கடைசி நொடியில் பஞ்சாப் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரின் போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
2020 ஐபிஎல் சீசன் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தொடரின் தொடக்கத்தில் இருந்து எல்லா போட்டிகளும் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
அதிலும் நேற்று நடந்த இரண்டு போட்டியும் டை ஆகி, கடைசியில் சூப்பர் ஓவர் வரை சென்றது. மும்பை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டு சூப்பர் ஓவர் வரை சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு
நேற்று முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பின் அதை சேஸ் செய்த பஞ்சாப் அணி 176 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கடைசி பந்தில் விழுந்த ரன் அவுட் காரணமாக போட்டி டை ஆனது. இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவர்
முதல் சூப்பர் ஓவரில் பும்ரா பவுலிங் செய்ய கே. எல் ராகுல் மற்றும் பூரான் பேட்டிங் செய்தனர். இந்த ஓவரில் பும்ரா 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மும்பை களமிறங்கியது. மும்பையில் ரோஹித் சர்மா டீ காக் களமிறங்கினார்கள். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் டீ காக் ரன் அவுட்டாக மும்பை அணி ஐந்து ரன்கள் எடுத்து போட்டி மீண்டும் டை ஆனது.

மீண்டும்
இதனால் ஒரே போட்டியில் மீண்டும் இன்னொரு சூப்பர் ஓவர் போடப்பட்டது. இந்த முறை மும்பை சார்பாக பொல்லார்ட், பாண்டியா களமிறங்கினார்கள். பஞ்சாப் சார்பாக ஜோர்டன் பவுலிங் செய்தார் .இவர்கள் இருவரும் 11 ரன்கள் எடுத்தனர். அதன்பின் பஞ்சாப் அணிக்காக இறங்கிய கெயில், மயங்க் அகர்வால் அதிரடியாக 2 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து வெற்றிபெற்றனர்.

எப்படி
இந்த போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரின் போது நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
பொதுவாக இரண்டாவது சூப்பர் ஓவரின் விதியின்படி ஒரு சூப்பரில் கலந்து கொண்ட பேட்ஸ்மேன், பவுலர் அடுத்த சூப்பர் ஓவரில் ஆட முடியாது. அதாவது ஒரு சூப்பர் ஒரு ஓவரில் அணி சார்பாக இரண்டு பேட்ஸ்மேன் + இன்னொரு பேட்ஸ்மேன் ஆட முடியும். ஒரு பவுலர் பவுலிங் செய்ய முடியும்.

முடியாது
ஆனால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டால் இவர்கள் யாரையும் பயன்படுத்த கூடாது. புதிய குழுவை அணிகள் அனுப்ப வேண்டும். நேற்று முதல் சூப்பர் ஓவரில் ரோஹித், டி காக்கிற்கு அடுத்து களமிறங்க பொல்லார்ட் தயாராக இருந்தார். மொத்தம் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் அடுத்த சூப்பர் ஓவரில் ஆட கூடாது. ஆனால் நேற்று இரண்டாவது சூப்பர் ஓவர் நடந்த போது பொல்லார்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார்.

ஏன் இப்படி
இதை பார்த்ததும் கே. எல் ராகுல் ஷாக் ஆனார். அதேபோல் கும்ப்ளேவும் ஷாக் ஆனார். வேகமாக சென்று இது குறித்து நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். எப்படி பொல்லார்ட் உள்ளே வரலாம் என்று கும்ப்ளே நீண்ட நேரம் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். கடைசியில் நடுவர்கள் அவரிடம் எம்சிசி கிரிக்கெட் விதிகளை விளக்கினார்கள்.

விதி என்ன சொல்கிறது
அதன்படி ஒரு சூப்பர் ஓவரில் களமிறங்கிய வீரர்கள் மட்டுமே அடுத்த ஓவரில் ஆட முடியாது. பொல்லார்ட் நேற்று களமிறங்க தயாராக இருந்தார். ஆனால் முதல் ஓவரில் அவர் இறங்கவில்லை. அவர் முதல் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்வதில் தவறு இல்லை, என்று நடுவர்கள் விளக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications