Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரிடம் கடுமையாக நடக்கிறார்கள்.. ஏதோ தவறு நடக்கிறது.. ரோஹித் சர்மா செய்த அந்த காரியம்.. சேவாக் பளீர்

துபாய்: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாதது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐபிஎல் 2020 தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் வெற்றிகளையே குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால் கேப்டன் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

கேள்வி

கேள்வி

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாதது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கேள்வி எழுப்பி உள்ளார்.சேவாக் தனது கேள்வியில், என்னுடைய காலத்தில் ஒரு வீரருக்கு காயம் என்றால் அவரை மொத்தமாக நீக்க மாட்டார்கள். பெரிய தொடர் நடக்கும் சமயங்களில் அவரை தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆட விட மாட்டார்கள். காயம் சரியானால் மீண்டும் அணிக்குள் கொண்டு வருவார்கள்.

கடுமை

கடுமை

ஒரு மூத்த வீரரிடம் தேர்வுக்குழு கடுமையாக செயல்படாது. ரோஹித் சர்மாவிற்கு இப்போது இருக்கும் காயத்தை மனதில் வைத்து வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் அது தவறு. ஏனென்றால் மொத்தமாக ஆஸ்திரேலிய தொடர் ஒரு மாதம் வரை நடக்கிறது. டெஸ்ட், ஒருநாள் , டி20 போட்டிகள் நடக்கிறது.

அணிக்குள் வர முடியும்

அணிக்குள் வர முடியும்

ரோஹித் நினைத்தால் அதற்குள் அணிக்குள் தேர்வாக முடியும். ஆனால் ஏன் அவரை மொத்தமாக நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அவரிடம் இந்திய தேர்வுக்குழு கடுமையாக செயல்பட்டுள்ளது. எதோ தவறு நடக்கிறது. அதேபோல் ரோஹித்திற்கு ஏற்பட்ட காயம் குறித்த விவரம் தெரியவில்லை.

உடல்நலம்

உடல்நலம்

அவர் உடல்நலம் சரியில்லை என்று கூறப்பட்டது. அப்படி என்றால் அவர் ஏன் மைதானத்திற்கு வருகிறார். அவர் ஓய்வு எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஏன் மைதானத்திற்கு வருகிறார். அவர் உண்மையில் உடல்நலம் சரியில்லாமல்தான் இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

மும்பை விளக்கம்

மும்பை விளக்கம்

ரோஹித் சர்மாவிற்கு என்ன மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என்று மும்பை அணி நிர்வாகம்தான் தெரிவிக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி இது தொடர்பாக வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக முறையான அறிக்கை வெளியிட வேண்டும். குறைந்தது அவர் தனது டிவிட்டரிலாவது விளக்கத்தை போஸ்ட் செய்ய வேண்டும், என்று சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.

Story first published: Thursday, October 29, 2020, 15:02 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+