ரெய்னா, ராயுடு.. 2 ஜாம்பவான்களின் இடத்தை நிரப்பும் ருத்துராஜ்.. யார் இந்த புதிய வீரர்.. மாஸ் பின்னணி
சார்ஜா: சென்னை அணியில் இன்று ரூத்துராஜ் கெய்காவாட் இணைந்துள்ளார். இவருக்கு வெறும் 23 வயதுதான் ஆகிறது.
சென்னை மாற்று ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி தொடங்கி உள்ளது. இதில் சென்னை அணி டாஸ் வெற்றிபெற்றது. டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார்.
சார்ஜா மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பான மைதானம். அதேபோல் இங்கு எளிதாக சேசிங் செய்ய முடியும். இதனால் சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

பேட்டிங்
சென்னை அணியில் இன்று ராயுடு நீக்கப்பட்டு உள்ளார். அவரின் உடல்நிலை முழு பார்மில் இல்லாத காரணத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதனால் தற்போது அவரின் இடத்தில் ரூத்துராஜ் கெய்காவாட் இணைந்துள்ளார்.

யார் இவர்
ரூத்துராஜ் கெய்காவாட் புனேவை சேர்ந்தவர். இவருக்கு 23 வயது தான் ஆகிறது. கடந்த வருடம் இவர் சென்னை அணிக்கு எடுக்கப்பட்டார். இவரை சென்னை அணி 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

என்ன பின்னணி
ரெய்னா சென்னை அணியில் இருந்து விலகிய போது, ரூத்துராஜ் கெய்காவாட் அந்த இடத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர், இன்று சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்.

யார் ஏன்
சென்னை அணியில் ராயுடு, ரெய்னா இல்லாத நிலையில் ரூத்துராஜ் கெய்காவாட் இன்று விளையாடுகிறார். இவர்கள் இருவரின் வெற்றிடத்தை நிரப்பி வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா அணிக்காக இவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடினார். இதன் மூலம் சிஎஸ்கே கவனத்தை ஈர்த்தார்.

கவனம் ஈர்த்தார்
மகாராஷ்டிரா அணிக்காக இவர் ரஞ்சி கோப்பை போட்டியில் 2017ல் சிறப்பாக ஆடினார். அதேபோல் 2017ல் விஜய் ஹசாரே போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். 2018ல் இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் 2019ல் இந்திய ஏ அணிக்காக விளையாடினார். இந்த போட்டிகளில் இவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக, சென்னை அணியில் தற்போது இணைந்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் இவர் சிறப்பாக ஆடிய காரணத்தால் இவர் மீது நம்பிக்கை வந்து அணியில் இவரை எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications