Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் மட்டும் ஸ்பெஷலா? தோனியை வளைக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகம்.. மொத்தமாக கதை முடிகிறதா.. பரபர பின்னணி

துபாய்: தொடர் தோல்விகளை அடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் கேப்டன் தோனி உட்பட அணியில் இருக்கும் எல்லோரின் மீதும் கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

சிஎஸ்கே அணி நினைத்து பார்க்க முடியாத சரிவை இந்த ஐபிஎல் தொடரில் சந்தித்து இருக்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி ஆடிய சீசன்களில் எல்லாம் பிளே ஆப் சென்று இருக்கிறது.

இந்த சீசனிலும் சிஎஸ்கே பிளே ஆப் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரிசையாக தோல்விகளை தழுவி சிஎஸ்கே பெரிய பின்னடைவை சந்தித்து உள்ளது. இதனால் பிளே ஆப் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கேவிற்கு கனவாகி உள்ளது.

எப்படி

எப்படி

சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு பல காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

  • சரியான பேட்டிங் ஆர்டர் இல்லை. இளைஞர்கள், மூத்த வீரர்கள் யாரும் ஆடவில்லை.
  • ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை.
  • மாற்று வீரர்கள் யாரும் பெரிய அளவில் பார்மில் இல்லை.
  • தோனியின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது.
மோசம்

மோசம்

சிஎஸ்கே அணி இப்படி அனைத்து துறைகளிலும் மிக மோசமாக ஆடியது. இதன் காரணமாகவே அந்த அணி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு மொத்த அணியும் காரணம் என்று தோனி குற்றஞ்சாட்டி இருந்தார். இரண்டாவது போட்டியில் இருந்தே சிஎஸ்கேவின் சரிவு தொடங்கி விட்டது என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

ஓப்பனிங் நன்றாக இருந்தால் மிடில் ஆர்டர் நன்றாக இல்லை, மிடில் ஆர்டர் நன்றாக இருந்தால் ஓப்பனிங் நன்றாக இல்லை. இந்த வருடம் எதுவம் சரியாக அமையவில்லை என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். தோனியே எனக்கு இது வலிக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தோனி இப்படி இளைஞர்களை குற்றம் சொல்கிறார், மூத்த வீரர்களை குற்றம் சொல்கிறார்.. ஆனால் எங்கும் அவர் தன்னை பற்றி பேசவே இல்லை.

தன்னுடைய கேப்டன்சி

தன்னுடைய கேப்டன்சி

தன்னுடைய பேட்டிங் சொதப்பியது பற்றி தோனி பேசவே இல்லை. தோனியும் கிட்டத்தட்ட ஜாதவ் போலதான் இந்த சீசனில் ஆடினார். ஆனால் அதை பற்றி தோனி பேசவே இல்லை. அதேபோல் தோனியின் கேப்டன்சியும் சொதப்பிவிட்டது, அவர் எடுத்த முடிவுகள் எல்லாம் தவறாக மாறிவிட்டது. ஆனால் இதை பற்றி எல்லாம் தோனி பேசவே இல்லை.

கேள்வி

கேள்வி

தோனியின் இந்த செயலை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர் மட்டும் என்ன ஸ்பெஷலா? ஏன் அவரை பற்றி எதுவுமே பேசுவது இல்லை. என்ன நடக்கிறது? தோனி செய்த தவறுக்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது என்று நெட்டிசன்கள் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் தோனியின் ஆட்டம் எப்படி இருந்தது என்பதையும்தான் விசாரிக்க போகிறது.

விசாரணை

விசாரணை

மொத்தமாக சிஎஸ்கேவில் எல்லோரையும் வளைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது . தோனியின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததா என்பதையும்தான் சிஎஸ்கே நிர்வாகம் விசாரிக்க உள்ளது. இந்த தொடர் முடிந்ததும் முதல் வேலையாக சிஎஸ்கே நிர்வாகம் இந்த பணிகளை செய்யும் என்கிறார்கள். தொடருக்கு அடுத்த சில நாட்களில் அணியில் நடக்கும் மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள்.

Story first published: Sunday, October 25, 2020, 14:08 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+