Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் இறங்கி வர தயார்.. இதுவரை செய்யாததை செய்ய துணிந்த தோனி.. இன்று நடக்க போகும் பெரும் டிவிஸ்ட்!

அபுதாபி: எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடி முடிவு ஒன்றை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

அபுதாபியில் இன்று நடக்க போகும் முதல் ஐபிஎல் போட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆம் கொரோனாவிற்கு இடையே உலகிலேயே நடக்க கூடிய மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக பார்க்கப்படுகிறது.

அதிலும் மும்பை - சென்னை என்று இரண்டு இருதுருவங்கள் இன்று மோதுகிறது. இரண்டு அணிகளும் இன்று நேருக்கு நேர் மோத உள்ள நிலையில், முக்கியமான கேள்வி ஒன்று இந்த ஐபிஎல் தொடரில் எழுந்து உள்ளது.

ஒரு கேள்வி

ஒரு கேள்வி

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து ரெய்னா விலகி இருக்கிறார். பர்சனல் காரணங்களுக்காக ரெய்னா போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இவரின் உறவினர்கள் கொள்ளையர்கள் மூலம் கொல்லப்பட்ட காரணத்தால் ரெய்னா அணியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் சென்னை அணியில் இப்போது 3ம் இடத்தில் விளையாட வீரர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

யார் எப்படி

யார் எப்படி

அதேபோல் சென்னை அணியில் 3ம் இடத்தில் விளையாட வேண்டிய ரித்துராஜ் கெய்காவாட் , கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் இவரும் மூன்றாம் இடத்தில் சென்னைக்கு அணிக்கு விளையாட வாய்ப்பு இல்லை. அதேபோல் ஓப்பனிங் வீரர்களாக டு பிளசிஸ் மற்றும் வாட்சன் இறங்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு

அதேபோல் அம்பதி ராயுடு சரியான பார்மில் இல்லை. இதனால் இவர் 4ம் இடத்தில் இறங்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். அதன்பின் தோனி, பிராவோ, ரெய்னா இறங்க வேண்டும். இதில்தான் சென்னை அணி டிவிஸ்ட் வைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி தோனியே மூன்றாவது இடத்தில் இறங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறுகிறார்கள்.

தோனி ஆசை

தோனி ஆசை

தோனி மூன்றாம் இடத்தில் இறங்கினால் அது அணிக்கு பெரிய பலம் கொடுக்கும். இதுவரை இல்லாத மிகப்பெரிய வலிமையை அணி அடைய வாய்ப்புள்ளது. தோனியும் மூன்றாம் இடத்தில் விளையாடும் திறமை கொண்டவர். இந்திய அணிக்காக அவர் சில முறை மூன்றாவது இடத்தில் விளையாடி இருக்கிறார்.

அவர் நினைத்தால்

அவர் நினைத்தால்

தோனி நினைத்தால் மூன்றாம் இடத்தில் இறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்ற முடியும். அவர் மிகப்பெரிய சக்தி மிக்க வீரராக இதனால் மாறுவார் என்று கூறுகிறார்கள். கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கடந்த ஒரு வாரமாக இந்த கோரிக்கையை வைத்து வருகிறார்கள். தோனி குறித்து பலர் அடுத்தடுத்து எழுதி வருகிறார்கள்.

யோசனை என்ன

யோசனை என்ன

இதற்கு தோனியும் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு விட்டார் என்றுதான் கூறுகிறார்கள். ஆம் தோனி மூன்றாம் இடத்தில் இறங்கி ஆட அதிக ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார்கள். கீழே இறங்கி ஆட தயார். இதன் மூலம் தனது பார்மை நிரூபிக்கலாம் என்று தோனி கருதுகிறார்... இன்றைய போட்டியில் பெரிய டிவிஸ்ட் நிகழ வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Saturday, September 19, 2020, 16:19 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+