For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை பார்த்து அவசரப்பட்டுவிட்டார்.. இனி வாய்ப்பே இல்லை.. சிஎஸ்கேவின் வெற்றி.. அதிர்ச்சியில் ரெய்னா

மும்பைக்கு அணிக்கு எதிராக சென்னை அணியின் நேற்றைய வெற்றி காரணமாக சென்னையில் இனி ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அபுதாபி: மும்பைக்கு அணிக்கு எதிராக சென்னை அணியின் நேற்றைய வெற்றி காரணமாக சென்னையில் இனி ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியை சென்னை வெற்றியோடு தொடங்கி உள்ளது. மும்பையை வீழ்த்தி, மாஸ் வெற்றியை சென்னை தனது ரசிகர்களுக்கு பரிசளித்தது.

சென்னை அணியில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். ஆனாலும் அந்த பாதிப்பிற்கான சுவடே இல்லாமல் சென்னை நேற்று வெற்றியை ருசி பார்த்தது.

வெற்றி ருசி

வெற்றி ருசி

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் டு பிளசிஸ் ஒன்டவுன் இறங்கினார். ரெய்னாவின் இடத்தில் யார் இறங்குவார் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், டு பிளசிஸ் இறங்கி, சென்னையின் கவலையை போக்கினார். இந்த இடத்தில் அவர் இறங்கி அவுட்டாகாமல், 58 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்து வந்த அம்பதி ராயுடுவும் 71 ரன்கள் எடுத்தார்.

சந்தேகம் தீர்ந்தது

சந்தேகம் தீர்ந்தது

இதனால் சென்னை அணியில் மூன்றாம் இடத்தில் இறங்க போகும் வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. சென்னை அணி ரெய்னா இல்லாமல்,மிக எளிதாக மும்பை போன்ற வலுவான அணியை வெல்ல முடியும் என்று நிரூபித்து உள்ளது. இதனால்தான் தற்போது ரெய்னாவின் இடம் சென்னை அணியில் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.

வாய்ப்பு உள்ளதா

வாய்ப்பு உள்ளதா

சென்னை அணிக்கு மீண்டும் ரெய்னா வர வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்த நிலையில் நேற்றைய சிஎஸ்கே இந்த கேள்வியை வலுப்படுத்தி உள்ளது. ரெய்னா இனி சென்னை அணிக்கு வர வாய்ப்பு இல்லை. அவருக்கு இருப்பது குடும்ப பிரச்சனை மட்டுமல்ல அணியிலும் அவருக்கு எதிரான கருத்தே நிலவி வருகிறது என்கிறார்கள். அதிலும் இவர் சென்னை அணியின் ஓனர் சீனிவாசன் உடன் கருத்து வேறுபாட்டில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது .

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

முதலில் ரெய்னா போட்டியில் இருந்து விலக குடும்ப பிரச்சனை காரணம் என்று கூறப்பட்டது. பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் உள்ள ரெய்னாவின் உறவினர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்தான் இதற்கு காரணம்.அவரின் வீட்டில் புகுந்த கும்பல் ரெய்னாவின் உறவினர்களை கொடூரமாக தாக்கிவிட்டு, வீட்டில் இருந்து பொருட்களை திருடி சென்று உள்ளனர். ரெய்னாவின் உறவினர் ஒருவர் இதில் பலியானார். இதன் காரணமாகவே ரெய்னா அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றார் .

வேறு என்ன காரணம்

வேறு என்ன காரணம்

அதே சமயம் தோனிக்கும், ரெய்னாவிற்கும் இந்த தொடரில் கருத்து வேறுபாடு வந்தது என்றும் தகவல்கள் வந்தது.தோனிக்கு கொடுத்தது போல வசதியான அறையை தனக்கு கொடுக்கவில்லை என்று ரெய்னா சண்டை போட்டதாக கூறப்பட்டது. சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூட ரெய்னாவிற்கு எதிராக பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மோதல்களால் ரெய்னா சென்னை அணிக்கு இனி வருவது சந்தேகம் தான் என்று கூறினார்கள்.

மோசம்

மோசம்

நேற்றைய போட்டி இந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அதோடு தோனியை பார்த்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ரெய்னா ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால் சிஎஸ்கேவிலும் மோதல் நிலவினால் ரெய்னா எங்கே செல்வார். ரெய்னா தோனியை பார்த்து அவசரப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னை அணியுடன் இல்லாதது தனக்கு வருத்தம் தருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

நேற்று ரெய்னா ''சென்னை பாய்ஸ் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் . அங்கே நான் இன்று இல்லை என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை. ஆனால் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடன் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்ல உணர்வை அனுப்புகிறேன்... என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சென்னை வெற்றிபெற்ற பின் அதற்கு ரெய்னா டிவிட்டரில் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Story first published: Monday, September 21, 2020, 0:18 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL 2020: Will raina play for Chennai Super Kings anymore?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+