Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிண்டலாக சிரித்த ரோஹித்.. தோனி சொல்லியும் கேட்காத சிஎஸ்கே.. நிர்வாகம் எடுத்த தவறான முடிவு.. அவமானம்

துபாய்: சிஎஸ்கே அணியின் ஒப்பனர்கள் தொடங்கி மிடில் ஆர்டர் வீரர்கள் வரை எல்லோரும் வரிசையாக அவுட் ஆனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பைக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மோசமாக திணறி வருகிறார்கள். இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

பேட்டிங் இறங்கிய சென்னை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. சென்னை அணியின் மோசமான ஆட்டம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சென்னை அணி இன்று 7 ஓவர் முடிவதற்குள் வரிசையாக அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. முதல் ஓவரில் ரூத்து ராஜ் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே அம்பதி ராயுடு, ஜெகதீசன் இரண்டு பேரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். முதல் ஓவரில் போல்ட் விக்கெட் எடுக்க அடுத்த ஓவரிலேயே பும்ரா விக்கெட் ஈடுத்தார்.

விக்கெட் விழுந்தது

விக்கெட் விழுந்தது

அதற்கு அடுத்து போல்ட் போட்ட 3வது ஓவர் மற்றும் 5வது ஓவரில் அடுத்தடுத்து டு பிளசிஸ், ஜடேஜா இருவரும் அவுட் ஆனார்கள். சிஎஸ்கே அணியை மொத்தமாக இந்த தொடர் விக்கெட்டுகள் உடைத்து போட்டது. அதன்பின் ஒரே நம்பிக்கையாக இருந்த தோனியும் ராகுல் சாகர் ஓவரில் சிக்ஸ் அடித்த கையோடு அவுட் ஆனார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர்கள் மொத்தமாக சொதப்பியது மிடில் ஆர்டரின் வேகமான சரிவுக்கு காரணமாக அமைந்தது. சிஎஸ்கே அணியில் இன்று வாய்ப்பு கிடைத்த என் ஜெகதீசன், ரூத்துராஜ் என்று இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை. சிஎஸ்கே அணியில் இப்படி எல்லாம் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் அரிதான விஷயம். ஆனால் அதை இரண்டு பேருமே டக் அவுட் ஆகி கெடுத்துவிட்டனர்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, இதைத்தான் கடந்த போட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதை மீறி அணியில் இன்று இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் முக்கிய வீரர்களை அணியில் இருந்து தூக்கிவிட்டு, இளம் வீரர்களை அணிக்குள் எடுத்தது.

தோனி எப்படி

தோனி எப்படி

வாட்சன் போன்ற வீரர்களை நீக்குவதில் தோனிக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனாலும் அதை மீறி இன்று அணியில் வாட்சன் போன்றவர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். விளைவு மொத்தமாக வீரர்கள் சொதப்பி உள்ளனர். அதிலும் இன்று மைதானத்தில் பெவிலியனில் ஓய்வு எடுத்த ரோஹித் சர்மா தொடங்கி பலர் சிஎஸ்கே விக்கெட்டுகளை பார்த்து கிண்டலாக சிரித்தது.. சிஎஸ்கே அணிக்கு பெரிய அவமானத்தை கொடுத்துள்ளது.

Story first published: Friday, October 23, 2020, 20:22 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+