Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆணவம்.. 2 வருடமாக தோனி செய்த புறக்கணிப்பு.. இதை முன்பே செய்திருந்தால்..சிஎஸ்கே எளிதாக வென்றிருக்கும்

துபாய்: சிஎஸ்கே அணியில் இருக்கும் இளைஞர்களுக்கு முன்பே வாய்ப்பு கொடுத்து இருந்தால் சிஎஸ்கே அணி ஒருவேளை இந்த சீசனில் தொடக்கத்தில் வென்று இருக்க வாய்ப்புகள் உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக மோசமாக ஆடி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வி அடைந்து சிஎஸ்கே பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தது.

முக்கியமாக டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் எல்லாம் சிஎஸ்கே மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

தோல்வி காரணம்

தோல்வி காரணம்

சிஎஸ்கேவின் மோசமான தோல்விக்கு அணியில் இருந்த மூத்த வீரர்கள் மோசமாக ஆடியதே காரணமாக பார்க்கப்பட்டது. வாட்சன், டு பிளசிஸ், தோனி, ஜாதவ் என்று மூத்த வீரர்கள் யாருமே இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஒரு சில போட்டியில் டு பிளசிஸ் நன்றாக ஆடினாலும் மற்ற போட்டியில் எல்லாம் மிக மோசமாக சொதப்பினார்.

சொதப்பல்

சொதப்பல்

சிஎஸ்கேவின் மூத்த வீரர்கள் பலர் தொடர்ந்து சொதப்பினாலும் கூட தோனி அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வந்தனர். அதிலும் கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து வரிசையாக சொதப்பி வந்தனர். ஆனாலும் இவர்களுக்கு எல்லாம் தோனி தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதற்கு காரணம் சொன்ன தோனி இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை. மூத்த வீரர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வாய்ப்பு வழங்கினேன் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். தோனியின் இந்த பேச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இளைஞர்கள் குறித்து தோனி இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறி இளைஞர்களை எல்லாம் தோனி பெஞ்சில் உட்கார வைத்தார். ஆனால் இன்று அதே இளைஞர்தான் தடுமாறிய சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இன்று ஓப்பனிங் வீரர் ரூத்துராஜ்தான் உதவினார். இன்று அவர் அடித்த அரை சதம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

எப்படி

எப்படி

ராயுடு, டு பிளசிஸ் இருவரும் அவுட்டான போதும் கூட ரூத்துராஜ்தான் இன்று சிஎஸ்கே அணியை காப்பற்றினார். இதை தோனி முன்பே செய்து இருந்தால், அப்போதே ஓப்பனிங் இறக்கி இருந்தால் ஒருவேளை சிஎஸ்கே அணியில் முன்பே ரூத்துராஜ் பார்மிற்கு திரும்பி இருப்பார். முன்பே அணியின் வெற்றிக்கு உதவி இருப்பார்.

தோல்வி

தோல்வி

ஆனால் தோனி இவர்களை தேவையில்லாமல் புறக்கணித்து, பெஞ்சில் உட்கார வைத்து சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒரு வகையில் காரணமாக இருந்தார். இன்று ரூத்துராஜ் புறக்கணிப்பிற்கு எல்லாம் பதிலடி கொடுத்து உள்ளார்.

Story first published: Sunday, October 25, 2020, 19:06 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+