Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கம்.. ப்ளே ஆஃப்-க்கு முன்னேறப்போவது யார்? இன்று இரு முக்கிய போட்டிகள்!

அமீரகம்: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

14வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகிறது.

இந்த ரேஸில் ஏற்கனவே சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் அடுத்த 2 இடத்திற்கு 5 அணிகள் மோதி வருகின்றன.

பஞ்சாப் - ஆர்சிபி

பஞ்சாப் - ஆர்சிபி

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும். 4வது இடத்திற்காக மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. அந்த வகையில் புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான போட்டியில் இன்று மதியம் ஆர்சிபியும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் 4ம் இடத்திற்கு முன்னேறும். பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைக்கும். பஞ்சாப் அணி அடுத்த 2 போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் ஒன்றில் தோல்வியடைந்தால் கூட வாய்ப்பு குறைவு தான்.

Recommended Video

Rajasthan Team-க்கு எதிரான தோல்விக்கு இதான் காரணம் - Dhoni கொடுத்த விளக்கம்
மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் தான் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவானதாகவும், நல்ல பேலன்ஸானதாகவும் செட் ஆகியிருந்தது. எனவே அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம்

கட்டாயம்

இதே போல இன்று இரவு மற்றொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ஐதராபாத் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் அடுத்துள்ள சில போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு காட்டுகிறது. இது ஒரு புறம் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் ரேஸில் கொல்கத்தா அணி நீடிக்கும். இல்லையென்றால் 4வது இடத்தை பிடிப்பது சந்தேகமே.

Story first published: Sunday, October 3, 2021, 15:35 [IST]
Other articles published on Oct 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+