"3 மீட்டர் ரூல்ஸ்".. அந்த ஒரு ரிவ்யூவில் குழம்பி போன கோலி.. நடுவருடன் வாக்கு வாதம்.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று டெல்லி பெங்களூர் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் ரிவ்யூ ஒன்றில் பயன்படுத்தப்பட்ட விதிமுறை பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.
Recommended Video
நேற்று டெல்லிக்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி அணி வெற்றிபெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட பெங்களூர் கடைசி ஓவரில் மாஸ் காட்டி வெற்றிபெற்றது.
நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் 171 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த டெல்லி அணி வெறும் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எப்படி
இந்த போட்டியில் டெல்லி அணி எடுத்த ரிவ்யூ ஒன்று சர்ச்சையாகி உள்ளது. சாகல் வீசிய 9வது ஓவரில் ஸ்டோனிஸ் அவுட் ஆனது போல இருந்தது. இவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனது போல இருந்தது.

அவுட்
ஆனால் நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதையடுத்து கோலி உடனே ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் பந்து சரியாக லைனில் குத்தி ஸ்டம்பை தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. நடு ஸ்டம்பை பந்து தாக்கியது. ஆனாலும் இதற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை.

விக்கெட்
மாறாக இது அம்பயர்ஸ் கால் என்று கொடுக்கப்பட்டது. இது பார்த்து கோலி குழம்பி போனார். ஏன் ஸ்டம்பை சரியாக தாக்கும் விக்கெட்டுக்கு அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டது என்று கேட்டார். இதற்கு 3 மீட்டர் ரூலை பயன்படுத்தியதாக நடுவர் விளக்கம் அளித்தார்.

3 மீட்டர் ரூல்ஸ்
இந்த 3 மீட்டர் விதியின்படி டிஆர்எஸ் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பில் இருந்து 3 மீட்டர் தூரம் குத்தி பின் ஸ்டம்பை தாக்கினால், நடுவரின் முடிவே இறுதியானது என்று முடிவு எடுக்கப்படும். நடுவர் என்ன முடிவு முன்பு கொடுத்தாரோ அதே முடிவு இறுதியானதாக அறிவிக்கப்படும்.

ஏன் இப்படி
நேற்று 3 மீட்டர் தூரத்திற்கு அதிகமாக பந்து பிட்ச் ஆனது. இதனால்தான் பந்து ஸ்டம்பில் பட்டாலும் அவுட் கொடுக்கப்படவில்லை. டிஆர்எஸ் தொழில்நுட்பம் அவ்வளவு துல்லியமானது இல்லை என்பதால் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.


Click it and Unblock the Notifications