Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் : ஆஸ்திரேலியாவின் 4 முக்கிய வீரர்கள் இல்லை.. வரமாட்டார்கள் என திட்டவட்டம்..

மும்பை: ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 முக்கிய வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மீதம் 31 போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.

 நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கு தயாராகும் நோக்கில் அயல்நாட்டு அணிகள் சர்வதேச தொடர்களை ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் முதலில் தங்களது வீரர்களை அனுப்ப முடியாது எனக்கூறி வந்தன. பின்னர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கியது. எனவே இனி வீரர்களின் விருப்பமே இறுதியாக உள்ளது.

4 ஆஸ்திரேலிய வீரர்கள்

4 ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்நிலையில் அஸ்திரேலியாவை சேர்ந்த 4 வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் கலந்துக்கொள்ளப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட பல வீரர்கள் ஐபிஎல்-ல் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இதில் இருந்து பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஜெயி ரிச்சர்ட்சன், ரைலே மெரிடித் ஆகிய 4 வீரர்கள் வெளியேறியுள்ளனர். ஆஸ்திரேலியா அணி சமீபத்தில் வெளியிட்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான குழுவிலும் இவர்கள் 4பேரும் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக எந்தவித போட்டிகளிலும் கலந்துக்கொள்ளாமல் ஓய்வெடுக்கப்போவதாக தெரிகிறது.

அணிகளுக்கு பின்னடைவு

அணிகளுக்கு பின்னடைவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிக முக்கியமான வீரராக பேட் கம்மின்ஸ் இருந்து வருகிறார். இவரை அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்ற பேச்சுக்களும் உலா வந்தது. ரைலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். அதே போல கேன் ரிச்சர்ட்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இவர்கள் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, August 20, 2021, 15:56 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+