
ப்ளே ஆஃப் போட்டி
ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4வது இடத்தை பிடிக்க மும்பை - கேகேஅர் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. கொல்கத்தா அணி தற்போது 14 புள்ளிகள் மற்றும் +0.587 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகள் மற்றும் -0.048 என்ற ரன்ரேட்டுடன் 6வது இடத்தில் உள்ளது.
மும்பை இன்று தனது கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதில் மும்பை அதிக ரன்ரேட்டுடன் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும்.

மும்பை செய்ய வேண்டியவை
இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை விட அதிக ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற வேண்டும். அதாவது மும்பை அணி முதலில் களமிறங்கினால் கண்டிப்பாக 200 ரன்களுக்கு மேலாக இலக்கு நிர்ணயிக்க வேண்டும். மேலும் ஐதராபாத் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் நிச்சயம் வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்தினால் மட்டுமே மும்பை அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இதற்கு சாத்தியமே இல்லையென ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

வெற்றி சாத்தியம்
இந்நிலையில் மும்பை அணியின் 4 வீரர்கள் நினைத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதாவது மும்பை அணி 240 முதல் 250 வரை இலக்கு நிர்ணயித்தால், ஐதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் போதும். 240 ரன்கள் என்பது ஐபிஎல் தொடரில் சகஜமான ஒன்று தான். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக கடந்த 2017ம் ஆண்டு 223 ரன்கள் குவித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த ஸ்கோரை எடுத்திருந்தது. ஐபிஎல் தொடரின் அதிகபட்ச இலக்கு ஆர்சிபி அணி அடித்த 263 ரன்கள் ஆகும்.

2 பேட்ஸ்மேன்கள்
இவ்வளவு பெரிய ஸ்கோரை மும்பை அணி மீண்டும் அடிக்க வேண்டும் என்றால் இரண்டு பேட்ஸ்மேன்களால் முடியும். கேப்டன் ரோகித் சர்மா தான் முக்கியமானவர். ரோகித் சர்மாவின் அதிரடி என்னவென்பது சர்வதேச அரங்கில் அனைவரும் அறிந்ததே ஆகும். ஐபிஎல்-ல் அவரின் அதிகபட்ச ரன்னாக கடந்த 2012ம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசினார். இதே போல பொல்லார்டின் பங்கும் முக்கியமானவை. ஐபிஎல் தொடரில் பொல்லார்ட் அதிகபட்சமாக 34 பந்துகளில் 87 ரன்களை விளாசியுள்ளார். இந்த அதிரடியை இந்தாண்டு தொடரில் தான் சிஎஸ்கேவுக்கு எதிராக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலிங்
இதே போல பந்துவீச்சிலும் மும்பை அணியின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அதாவது ஐதராபாத் அணியை 60 - 70 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்றால் பும்ரா மற்றும் ஆகும். ஐபிஎல் தொடரில் பும்ரா இதற்கு முன்னர் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்துள்ளார். இதுவே இவரின் சிறந்த பவுலிங். இதே போல ட்ரெண்ட் போல்ட்-ம் ஐபிஎல்-ல் இதற்கு முன்னர் வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். எனவே இவை அனைத்தும் ஒன்றாக இன்று செயல்பட்டால் நிச்சயம் மும்பை அணியால் அபார வெற்றி பெற்றும் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.


Click it and Unblock the Notifications