Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2 தமிழக வீரர்களும் வேண்டும்.. உறுதியாக நின்ற வார்னர்.. ஒன்றாக களமிறங்கிய 4 பேர்.. பெருமை!

சென்னை: ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் 4 தமிழக வீரர்கள் ஆடுகிறார்கள்.

Recommended Video

KKRக்கு சின்ன விசில் அடிங்க - Dinesh karthik அன்பான வேண்டுகோள் |Oneindia Tamil

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. கொல்கத்தாவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

சென்னை பிட்சில் இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்வது கஷ்டம் என்பதால் ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. கடந்த பெங்களூர் vs மும்பை போட்டியில் டாஸ் வென்ற கோலியும் டாஸ் வென்று பவுலிங்கே தேர்வு செய்தார்.

எப்படி

எப்படி

இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் அணியில் மீண்டும் நடராஜன் கம்பேக் கொடுத்துள்ளார். அணியில் புவனேஷ்வர் குமார் இருந்தால் நடராஜனுக்கு வார்னர் வாய்ப்பு கொடுத்துள்ளார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியின் மிக முக்கியமான பவுலராக நடராஜன் இருந்தார்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

நடராஜனோடு சேர்த்து இன்று நடக்கும் போட்டியில் இன்னொரு தமிழக வீரர் விஜய் சங்கருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழக வீரர்களும் இன்றைய போட்டியில் மிக முக்கியம். இவர்கள்தான் வேண்டும் என்று உறுதியாக நின்று வார்னர் இவர்களை தேர்வு செய்துள்ளார்.

தினேஷ்

தினேஷ்

இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியிலும் இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அதேபோல் தமிழக ஸ்பின் பவுலர் வருண் சக்ரவர்த்தி மீண்டும் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார்.

பெருமை

பெருமை

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் 4 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேப்பாக்கம் ஸ்பின் பவுலிங் பிட்ச் பவுலிங் என்பதால் ஆட்டம் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, April 11, 2021, 19:37 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+