Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கொடுமையான வாரம்".. அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா.. பிரீத்தி அஸ்வின் அதிர்ச்சி தகவல்!

சென்னை: இந்திய அணியில் ஆடும் தமிழக வீரர் அஸ்வினின் குடும்பத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பதாக அவரின் மனைவி பிரீத்தி அஸ்வின் டிவிட் செய்துள்ளார்.

Recommended Video

Ashwin குடும்பத்தில் 10 பேருக்கு Corona! Preethi Ashwin தகவல்! | OneIndia Tamil

2021 ஐபிஎல் தொடரில் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பலர் வெளியேறி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக இந்திய வீரர் அஸ்வின் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார்.

டெல்லி அணியின் மூத்த ஸ்பின் பவுலர் இவர்தான். திடீரென தொடரில் இருந்து பிரேக் எடுக்க போவதாக அறிவித்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களின் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க போவதாக அஸ்வின் அறிவித்து இருந்தார்

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த நிலையில் அஸ்வினின் குடும்பத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருப்பதாக அவரின் மனைவி பிரீத்தி அஸ்வின் டிவிட் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட் செய்துள்ள பிரீத்தி அஸ்வின், எங்கள் குடும்பத்தில் ஒரே வாரத்தில் 10 பேருக்கு கொரோனா வந்துவிட்டது.

கொரோனா

கொரோனா

6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் என்று வரிசையாக பலருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டு வேறு வேறு மருத்துவமனைகள், குடும்பங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மிக கொடுமையான வாரம் இது.

மோசம்

மோசம்

எல்லோரும் முடிந்த அளவு சீக்கிரம் வேக்சின் எடுங்கள். உங்கள் குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க இதுவே ஒரே வழி. உடல் கூட சீக்கிரம் குணமாகிவிடும். ஆனால் மனரீதியாக ஆரோக்கியம் பெறுவது கஷ்டம். கடந்த 5-8 நாட்கள் எனக்கு மோசமாக இருந்தது.

தனிமை

தனிமை

எனக்காக பலர் இருந்தாலும், தனிமையில் மோசமாக கஷ்டப்பட்டேன். இந்த நோய் உங்களை மோசமாக தனியாக உணர வைக்கும், என்று அஸ்வினின் மனைவி பிரீத்தி அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இப்படி குடும்ப உறுப்பினர்கள் பலர் பாதிக்கப்பட்ட காரணத்தாலேயே அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 1, 2021, 11:52 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+