For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா செய்யும் பெரிய தப்பு.. அப்படிபட்ட வீரருக்கு வாய்ப்பே இல்ல.. முன்னாள் வீரர் பளார்!

மும்பை: கொல்கத்தா அணி ஆண்ட்ரே ரஸலை பயன்படுத்தும் விதம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கோபம் காட்டியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் வழக்கம் போல கொல்கத்தா அணி, பேட்டிங்கில் படு சொதப்பலில் ஈடுபட்டது. கடைசி ஓவர் வரை ஒரு வீரரால் கூட அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்த முடியவில்லை.

அது ஒரு டீமே கிடையாது.. ராஜஸ்தானை விளாசும் சேவாக்.. சஞ்சு சாம்சன் மீது ஏன் தீராத குற்றச்சாட்டு!அது ஒரு டீமே கிடையாது.. ராஜஸ்தானை விளாசும் சேவாக்.. சஞ்சு சாம்சன் மீது ஏன் தீராத குற்றச்சாட்டு!

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

கொல்கத்தா அணி மீண்டும் டாப் ஆர்டரில் படு சொதப்பல் செய்தது. தொடக்க வீரர்கள் நிதிஷ் ராணா 22 ரன்கள், சுப்மன் கில் 11 ரன்களுக்கு வெளியேற அடுத்து வந்த வீரர்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 15 ஓவர்களில் கூட 100 ரன்களை தாண்டவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய ரஸல் இந்த போட்டியிலும் அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 7வது வீரராக களமிறக்கினார் அணியின் கேப்டன் மோர்கன்.

பிரஷர்

பிரஷர்

16வது ஓவரில் களத்திற்கு வந்த அவர், அடித்து ஆட வேண்டிய பிரஷரால் தூக்கி அடிக்க முயன்று சுலபமாக அவுட்டானார். அவரை ஒரு வேளை முன்கூட்டியே களமிறக்கியிருந்தால் அணியின் ஸ்கோர் நன்கு உயர்ந்திருக்கும், ஆனால் மோர்கன் செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சோப்ரா விமர்சனம்

சோப்ரா விமர்சனம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கொல்கத்தா அணி ரஸலுக்கு முழு வாய்ப்பை கொடுப்பதில்லை. அவரை மிகக்குறைவான பந்துகளுக்கே களமிறக்குகின்றனர். எதிரணி வீரர்கள் ரஸல் களமிறங்கி விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். ஆனால் இவ்வளவு தாமதமாக அவர் களத்திற்கு வந்தால் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவார்.

 கொல்கத்தா அணியின் தவறு

கொல்கத்தா அணியின் தவறு

10 ஓவர்களுக்குள் விக்கெட்கள் அதிகமாக விழுந்தால், எனது முடிவு ரஸலை களமிறக்குவதுதான். அந்த முடிவு தவறாகவும் முடியலாம். ஆனால் ஒருவேளை அது சரியாக அமைந்தால் கொல்கத்தா அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கும். எனவே ரஸல் விஷயத்தில் கொல்கத்தா அணி தவறு செய்கிறது. அவரை முன்கூட்டியே களமிறக்கி நிறைய பந்துகள் ஆட வைக்க வேண்டும் என சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 25, 2021, 16:53 [IST]
Other articles published on Apr 25, 2021
English summary
Aakash Chopra points out the KKR's Mistakes on managing batting line up
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X