Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீரர்களை தொடர்ந்து.. அடுத்தடுத்து வெளியேறும் நடுவர்கள்.. ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய 2 அம்பயர்கள்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்கள் வரிசையாக வெளியேறிய நிலையில் தற்போது நடுவர்களும் வெளியேற தொடங்கி உள்ளனர்.

Recommended Video

IPL 2021: பாதியில் வெளியேறிய 5 Players | OneIndia Tamil

2021 ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு வீரராக தொடரில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இந்த ஐபிஎல் தொடர் இப்போது அவசியமா? தொடர்ந்து போட்டிகள் நடக்க வேண்டுமா? என்று கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இந்த நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் இருந்து இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் வெளியேறி உள்ளார். இந்தியாவின் நடுவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். ஐசிசி எலைட் லிஸ்டில் இருக்கும் ஒரே இந்திய நடுவர் நிதின் மேனன்தான்.

துல்லியம்

துல்லியம்

துல்லியமாக முடிவு எடுக்க கூடியவர், தவறு செய்யாதவர் என்று நிதின் மேனன் பல முறை பாராட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் பாதி தொடரில் இருந்து நிதின் மேனன் வெளியேறி உள்ளார்.

நடுவர்

நடுவர்

அதேபோல் ஐபிஎல்லில் நடுவராக இருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரெய்பல் இதேபோல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு முழு லாக்டவுன் வருவதற்கு முன் திரும்பி செல்ல வேண்டும் என்று பால் ரெய்பல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

முன்னதாக ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வீரர் அஸ்வின் வெளியேறினார். பின்னர் ஆண்ட்ரு டை, லியாம் லிவிங்ஸ்டன், ஆடம் சாம்பா, கெண் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் வெளியேறினார்கள். தற்போது வீரர்களை தொடர்ந்து நடுவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

Story first published: Thursday, April 29, 2021, 17:54 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+