
நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் வரை டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடைபெற்று வந்தது. இதில் அகமதாபாத் நகரத்தின் பஜ்ராபோல் எனும் இடத்தில் கொல்கத்தா அணி வீரர்கள இருந்த 3 பேருந்துகள் சென்றுள்ளன. அப்போது அவர்களின் பேருந்து செல்வதற்காக சாலையில் சென்றுகொண்டிருந்த அனைத்து வாகனங்களை போலீசார் நிறுத்திவைத்திருந்துள்ளனர். அதில் ஆம்புலன்ஸும் ஒன்று.

வைரல் வீடியோ
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவல் ஆம்புலன்ஸுக்கு பொதுமக்கள் களமிறங்கி வழி ஏற்படுத்திகொடுத்து வருகின்றனர். ஆனால் காவலர்கள் கிரிக்கெட் வீரர்களுக்காக ஆம்புலன்ஸை நிறுத்துவதா? எனக்கூறி அதுகுறித்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அதிகாரி விளக்கம்
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அகமதாபாத் ஐஜி மயங்சிங், இந்த சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளார். ஐபிஎல் வீரர்களாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி எந்தவொரு விஐபிக்களுக்காகவும் போலீசார் ஆம்புலன்ஸை நிறுத்தமாட்டார்கள். இறுதி சடங்கிற்கான வாகனங்களை கூட நிறுத்தமாட்டார்கள். நடைபெற்றுள்ள சம்பவத்தில் ஏதே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அவசரம் கிடையாது
இதுகுறித்து நான் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விசரித்தேன், ஐபிஎல் வீரர்களின் 3 பேருந்துகளில் 2 பேருந்துகள் கடந்துவிட்டன, 3வது பேருந்து வேகமாக கடக்கும் போதுதான் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்த முயன்றால் விபத்தை ஏற்படுத்தும். அதனால் தான் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடியோவில் அந்த ஆம்புலன்ஸானது அவசரத்திற்கான எந்தவொரு சைரன் சத்தத்தையும் எழுப்பவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

சிஎஸ்கேவின் தவறு
இதற்கு முன்னர் டெல்லியில் தனது தந்தைகாக ஒருவர் எடுத்துச்சென்ற ஆக்சிஜன் கான்சண்டிரேட்டரை சிஎஸ்கே நிர்வாகம் தவறுதலாக எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல தற்போது நடந்துள்ள ஒருசம்பவம் பொதுமக்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











