Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ‘மாஸ்டர்’ பிளான்... ஆர்சிபிக்கு தண்ணி காட்டிய ஜடேஜா.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

மும்பை: ஜடேஜாவின் அசத்தல் ஆட்டத்தால் ஆர்சிபி அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடக்கம்

தொடக்கம்

டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், டுப்ளசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இன்றி 51 ரன்கள் எடுத்தது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

ஆனால் இந்த ஜோடியை பிரிக்க முயன்ற கோலிக்கு 10 ஓவரில் தான் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக ஆடி வந்த ருத்ராஜ் கெயிக்வாட் 33 ரன்களுக்கு சஹார் பந்துவீச்சில் அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேர்த்தது. பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டினார்.

 கட்ப்படுத்திய ஹர்ஷல்

கட்ப்படுத்திய ஹர்ஷல்

மலமலவென உயர்ந்து வந்த சிஎஸ்கே அணியின் ஸ்கோரை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஹர்ஷல் பட்டேல் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து கட்டுப்படுத்தினார். தொடக்கம் முதலே ஆர்சிபி அணியின் பதுவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு விரட்டி வந்த சுரேஷ் ரெய்னா 24 ரன்களுக்கு அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக 50 ரன்களுக்கு டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு 14 ரன்களுக்கு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் வெளியேறினர்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

19வது ஓவர் வரை 154 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சிஎஸ்கே, ரவீந்திர ஜடேஜாவின் காட்டடியால் கடைசி ஓவரில் 37 ரன்களை குவித்தது. ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 191 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிரட்டிய ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளும் அடங்கும். அவருடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த

ஓப்பனிங்

ஓப்பனிங்

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ஆனால் நீண்ட நேரம் இந்த பார்ட்னர்ஷிப் நிலைக்கவில்லை. அந்த அணி 44 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கோலி 8 ரன்களுக்கு வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் இந்த விக்கெட்டிற்கு பிறகு ஆர்சிபி அணியில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது பெங்களூரு அணி.

 ஜடேஜா சுழல்

ஜடேஜா சுழல்

பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஜடேஜா பவுலிங்கிலும் 3 விக்கெட்களை எடுத்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர்கள் க்ளென் மேக்ஸ்வெல்(22), டிவில்லியர்ஸ்(4), டேனியல் கிறிஸ்டியன் (1) என அடுத்தடுத்து ஜடேஜா சுழலில் சிக்கி வெளியேறினர்.

 சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கிய இம்ரான் தாஹீர் தனது பங்கிற்கு ஹர்ஷல் பட்டேல்(0), நவ்தீப் சைனி (2) என 2 விக்கெட்களை எடுத்தார். இதன் பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.

Story first published: Sunday, April 25, 2021, 20:20 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+