தினமும் இதே கதையா போச்சு..அது எப்படி ஒரே வாரத்தில்.. சிஎஸ்கேவால் மட்டும் இது முடிந்தது..செம சம்பவம்

சென்னை: 2021 ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் எல்லா வீரர்களும் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. புதிதாக அணிக்குள் 6 வீரர்கள் எடுக்கப்பட்டு இருப்பதால் அணி நிர்வாகம் உற்சாகத்தில் உள்ளது.

நல்லா கவனிங்க.. ஏதோ சரியில்லை.. 5 இன்னிங்சிலும் நடந்த அந்த சம்பவம்.. இந்திய அணிக்குள் பரபரப்பு!

கடந்த சீசனில் ஏற்பட்ட அவமானத்திற்கு இந்த சீசனில் பதிலடி கொடுக்கும் முடிவில் சிஎஸ்கே அணி இருக்கிறது. விரைவில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளது.

எப்படி

எப்படி

2021 ஐபிஎல் நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் எல்லா வீரர்களும் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். சிஎஸ்கேவை சேர்ந்த ஒவ்வொரு வீரரும் பாரமிற்கு திரும்பி உள்ளனர். முக்கியமாக தற்போது நடக்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்துள்ளனர்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கேவின் புதிய வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி வருகிறார். இவர் ஆடிய 3 போட்டிகளில் 2ல் சதம் அடித்தார். இன்னொரு போட்டியில் 80+ ரன்களை எடுத்தார். அதேபோல் சாய் கிஷோர் மிகவும் அதிரடியாக பவுலிங் செய்து கலக்கி வருகிறார்.

மாற்றம்

மாற்றம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே வீரர் ரூத்துராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்காக மிகவும் அதிரடியாக ஆடி வருகிறார். இவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சிஎஸ்கே வீரர்கள் பலரும் பார்மிற்கு திரும்பி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னரும் அதிரடியாக ஆடி வருகிறார்.

முக்கியம்

முக்கியம்

இன்று ஆஸ்திரேலியாவிற்கு நியூசிலாந்துக்கு இடையில் டி 20 போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி 219 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதில் சிஎஸ்கேவை சேர்ந்த நியூசிலாந்து வீரர் மிட்சல் சாண்ட்னர் அதிரடியாக பவுலிங் செய்து 4 விக்கெட் எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

வெறும் 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிட்ச் பேட்டிங் பிட்சாக இருந்தும் கூட இவர் மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்தார். மிட்சல் சாண்ட்னர் மீண்டும் பார்மிற்கு வந்து இருப்பதால் சிஎஸ்கே அணியில் ஒரு வெளிநாட்டு ஆல் ரவுண்டரின் இடத்தை இவர் நிரப்பலாம். ஒரே வாரத்தில் இப்படி அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்கள் பார்மிற்கு திரும்புவது மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Almost all the CSK players got into form in a single week of games.
Story first published: Thursday, February 25, 2021, 10:32 [IST]
Other articles published on Feb 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X