Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னொரு ஜாம்பவானும் அவுட்டா? நொண்டியபடி நடந்து சென்ற வீரர்.. தோனிக்கு வந்த புது சிக்கல்.. பின்னணி!

சென்னை: சிஎஸ்கே அணியில் ஏற்கனவே மொயின் அலி காயம் அடைந்துள்ள நிலையில் இன்னொரு வீரரும் காயம் அடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.

சிஎஸ்கேவிற்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற உள்ளது. டெல்லியில் இரண்டு அணிகளும் இன்று மோதுகின்றன.

இதுவரை 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஹைதராபாத் வென்றுள்ளது. சிஎஸ்கே அணியோ 5 போட்டிகளில் 4ல் வரிசையாக வென்றுள்ளது.

எப்படி

எப்படி

கடந்த போட்டியில் சிஎஸ்கேவில் மொயின் அலி ஆடவில்லை. இவருக்கு பதிலாக பிராவோ மீண்டும் அணிக்குள் வந்தார். அதேபோல் இம்ரான் தாஹிர் மீண்டும் அணியில் இணைந்தார். லுங்கி நிகிடி நீக்கப்பட்டார்.

பவுலிங்

பவுலிங்

மொயின் அலி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அணியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கேவின் இன்னொரு டாப் ஆர்டர் வீரர் அம்பதி ராயுடு காயம் அடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. கடந்த போட்டியில் இவரின் காலில் காயம் ஏற்பட்டது.

கால்

கால்

இதனால் ஓடும் போது அம்பதி ராயுடு நொண்டியபடி ஓடினார். போட்டிக்கு பின்பும் கஷ்டப்பட்டுதான் நடந்தார். இந்த நிலையில் அவர் முழு பிட்னசில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரால் வேகமாக ஓட முடியுமா என்று தெரியவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் இன்று நடக்கும் போட்டியில் அம்பதி ராயுடு ஆடுவது சந்தேகம் என்கிறார்கள். அவருக்கு பதிலாக இன்று நடக்கும் ஆட்டத்தில் ராபின் உத்தப்பா இறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் உத்தப்பா களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Wednesday, April 28, 2021, 20:25 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+