Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் ஏன் இப்படி பண்ணுறாரு? புரியலையே.. சந்தேகத்தை கிளப்பிய பவுலரின் செயல்.. நேற்று நடந்த சம்பவம்!

சென்னை: சிஎஸ்கேவிற்கு எதிராக நேற்று மும்பையில் நடந்த போட்டியில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா பீல்டிங் செய்த விதம் சந்தேகத்தை எழுப்பியது.

சிஎஸ்கே டெல்லி அணிகளுக்கு இடையில் நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக சென்றது. சிஎஸ்கே அணி அதிரடியாக பேட்டிங் செய்து டெல்லிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

சிஎஸ்கே அணியின் பவுலிங் சொதப்பிய நிலையில் டெல்லி அணி 18.4 ஓவரிலேயே எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா பீல்டிங் செய்த விதம் சந்தேகத்தை எழுப்பியது. இவர் பல பவுண்டரிகளை வேண்டுமென்றே விட்டது போல இருந்தது. ஈசியாக வந்த பந்துகளை கூட அமித் மிஸ்ரா மிஸ் செய்து பவுண்டரி விட்டார்.

மிஸ்ரா

மிஸ்ரா

பொதுவாக அமித் மிஸ்ரா சரியாக பீல்டிங் செய்ய மாட்டார். ஆனால் நேற்று இவரின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. முக்கியமாக ஸ்டோனிஸ் வீசிய 13வது ஓவரில் ராயுடு, ரெய்னா மாற்றி மாற்றி அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தனர். இதில் அமித் மிஸ்ரா நிறைய மிஸ் பீல்ட் செய்தார்.

கீப்பர்

கீப்பர்

முக்கியமாக கீப்பருக்கு பின் பக்கம் சென்ற பந்து ஒன்றை மிக மெதுவாக ஓடி தடுக்க முயன்றார். பந்தை தடுக்க வாய்ப்பு இருந்தும் கூட அதை தடுக்காமல் மிகவும் மெதுவாகவே அமித் மிஸ்ரா ஓடினார். பந்து மெதுவாக சென்று பவுண்டரியை தொடும் வரை ஜாக்கிங் செல்வது போல சென்றார்.

கேப்டன் பண்ட்

கேப்டன் பண்ட்

இதை பார்த்து டெல்லி கேப்டன் பண்ட் தொடங்கி எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன இவர் இப்படி பண்ணுறாரு.. இவருக்கு ஆட விருப்பம் இருக்கா இல்லையா என்று சந்தேகம் அடையும் அளவிற்கு இவரின் பீல்டிங் நேற்று மோசமாக இருந்தது. பண்டே இவர் மீது நேற்று கோபப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 11, 2021, 12:16 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+