வர முடியாது.. வேண்டுமென்றே சிங்கிள் கொடுக்காத ரசல்.. திட்டமிட்டு தோற்ற கேகேஆர்? சந்தேகமாக இருக்கே!
சென்னை: மும்பைக்கு எதிராக நேற்று கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரசல் மோசமாக சொதப்பி, அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.
2019 ஐபிஎல் தொடர்களில் ரசல் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்தார். ரசல் வந்தாலே ஆட்டம் மாறிவிடும் என்று கருதும் நிலை இருந்தது.
அதன்பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரசல் சர்வதேச அளவில் லீக் போட்டிகள் அனைத்திலும் சொதப்பினார். மொத்தமாக பார்மை இழந்து கஷ்டப்பட்டார்.

கடந்த வருடம்
கடந்த வருடமும் ஐபிஎல் போட்டியில் சரியாக ஆடவில்லை. இந்த நிலையில் இந்த வருடமாவது ரசல் பார்மிற்கு திரும்புவார் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் நம்பியது. அதற்கு ஏற்றபடி நேற்று பவுலிங்கிலும் ரசல் ஒரு கலக்கு கலக்கினார். 2 ஓவர்களை வீசி 5 விக்கெட் எடுத்து சாதித்தார்.

பேட்டிங்
ஆனால் நேற்று ரசலின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. நேற்று இவர் பேட்டிங் இறங்கிய தொடக்கத்தில் இருந்தே பந்தை எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டார். முக்கியமாக ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். பிட்ச் கொஞ்சம் ஸ்விங் ஆக தொடங்கியதால் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது.

சாதகம்
இதனால் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டார். இரண்டு முறை கேட்ச் கொடுத்து, அந்த கேட்சை மும்பை வீரர்கள் மிஸ் செய்தும் கூட இவரால் நேற்று கொல்கத்தா அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இவர் ஒரே ஒரு பவுண்டரிதான் நேற்று அடித்தார். அதுவும் ப்ரீ ஹிட்டில் வந்த பவுண்டரி.

பவுண்டரி
அதோடு இவர் பும்ராவை எதிர்கொள்ள பயந்தார். 19வது ஓவரை பும்ரா வீசுகிறார் என்று தெரிந்து, அதற்கு முன் 18வது ஓவரின் கடைசி பாலில் சிங்கிள் ஓட மறுத்தார். சிங்கிள் ஓடினால் பும்ரா ஓவரில் ஸ்டிரைக் எடுக்க வேண்டும் என்று, தினேஷ் கார்த்திக்கிடம் ஓட வேண்டாம் என்று சைகை செய்தார்.

ஏன் இப்படி
அதற்கு முன்பும் ஒரு ஓவரில் ரசல் இப்படித்தான் ரன் இப்படித்தான் சிங்கிள் கொடுக்க மறுத்தார். நேற்று ஏன் இவர் இப்படி ஆடினார்? வேண்டுமென்றே திட்டமிட்டு கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததா? ஏன் இவர் ஜெயிக்க வேண்டிய போட்டியை இப்படி தோல்வியை நோக்கி கொண்டு சென்றார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications