Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்ட்ரு டை சொன்ன அந்த வார்த்தை.. கலங்கிய ஆஸி வீரர்கள்.. மொத்தமாக ஐபிஎல்லில் இருந்து வெளியேற முடிவா?

சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு டை கூறிய விஷயம் ஒன்று, சக ஆஸி. வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

IPL வீரர்களின் பாதுகாப்பு எவ்வளவு காலம் தொடரும்? Andrew Tye கேள்வி

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு பக்கம் ஐபிஎல் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் பயோ பபுள் விதிகளோடு ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா கேஸ்களால் வரிசையாக வெளிநாட்டு வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகிறார்கள். தொடர்ந்து இந்தியாவில் இருந்து கிரிக்கெட் ஆட விருப்பம் இன்று வெளியேறி வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் முதல் ஆளாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு டை வெளியேறினார். இந்தியாவில் உயரும் கொரோனா கேஸ்களை காரணம் காட்டி ராஜஸ்தான் அணிக்காக ஆடும் ஆண்ட்ரு டை வெளியேறி உள்ளார். இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கைதான் ஆஸி. வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆண்ட்ரு டை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் வருகின்றன. இது எல்லாம் டெஸ்ட் எடுத்து வரும் முடிவுகள். டெஸ்ட் எடுக்காமல் இன்னும் பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம். பலர் இப்படி பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் பாதுகாப்பாகவே நடக்கிறது. பிசிசிஐ நன்றாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனாலும் இப்படி கேஸ்கள் உயரும் போது, மக்கள் இப்படி அவதிப்படும் போது கிரிக்கெட் ஆடுவது கஷ்டத்தை தருகிறது. மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது நாங்கள் ஐபிஎல் ஆடுவது கஷ்டத்தை தருகிறது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கின்றன. இதனால் நான் தாமதம் செய்தால் வீட்டிற்கு போக முடியுமா என்று தெரியவில்லை. விமான பயணம் அனுமதிக்கப்படுமா என்று தெரியவில்லை. அதனால்தான் இப்போதே ஊருக்கு கிளம்புகிறேன். விமான பயணம் அனுமதிக்கப்படும் போதே சொந்த ஊருக்கு செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆஸி வீரர்கள்

ஆஸி வீரர்கள்

இவரின் இந்த பேச்சுதான் ஐபிஎல்லில் ஆடும் ஆஸி வீரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு விமான பயணம் அனுமதிக்கப்படுமா? இந்தியாவில் இருந்து திரும்பி செல்ல முடியுமா? இல்லை லாக்டவுனில் மாட்டிக்கொள்வோமா என்ற கலக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அரசு விமான பயணத்தை நிறுத்தும் திட்டத்தில் உள்ளது.

குழப்பம்

குழப்பம்

இதனால் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்மித் என்று பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது என்கிறார்கள். லாக்டவுன் காரணமாக இந்தியாவில் மாட்டிக்கொள்ளாமல், விமான போக்குவரத்து இருக்கும் போதே சொந்த ஊருக்கு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால்தான் ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்களும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 27, 2021, 10:11 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+