Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜான்டி ரோட்சே எழுந்து நின்றுவிட்டார்.. மைதானத்தை உறைய வைத்த சம்பவம்.. காரணம் 22 வயது வீரர்!

சென்னை: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் ஒருவர் செய்த காரியம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

நேற்று பஞ்சாப் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றது. முதலில் பேட்டிங் இறங்கி அதிரடி காட்டிய பஞ்சாப் அணி 221 ரன்கள் எடுத்தது.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. யாரும் எதிர்பார்க்காமல் மனன் வோஹ்ரா ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் இறங்கி இருந்தார்.

மனன் வோஹ்ரா

மனன் வோஹ்ரா

முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடிய நிலையில் வோஹ்ரா பஞ்சாப் அணியால் ஓப்பனிங் இறக்கப்பட்டார். இவரும் ஒரு சிக்ஸ், பவுண்டரி என்று கொஞ்சம் அடித்து ஆடி நம்பிக்கை கொடுத்தார். இவரை நீண்ட நேரம் நிற்க விட்டால் கண்டிப்பாக அதிரடியாக ஆடி, ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்.

ஓவர்

ஓவர்

இந்த நிலையில்தான் பஞ்சாப் கேப்டன் ராகுல் பவுலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓவர் கொடுத்தார். அர்ஷ்தீப் சிங் நேற்று நல்ல லைனில் பவுலிங் செய்தார். இக்கட்டான நேரத்திலும் டென்சன் இல்லாமல் பவுலிங் செய்தார். அதன்படி நேற்று வோஹ்ராவிற்கும் உடலை குறி வைத்து, சரியான லைனில் பவுல் செய்தார்.

கஷ்டம்

கஷ்டம்

பொதுவாக உடலுக்கு வரும் பாலை அடிக்க முடியாமல் வோஹ்ரா திணறுவார். நேற்றும் அர்ஷ்தீப் போட்ட பந்தை எதிர்கொள்ள முடியாமல், நேராக பந்தை சுற்றினார். மிக வேகமாக வந்த பந்தை, கண்ணை மூடிக்கொண்டு பவுலர் அர்ஷ்தீப் சிங் பிடித்தார். பந்தை போட்டுவிட்டு, அடுத்த நொடியே இதை பிடித்தார்.

1 நொடி

1 நொடி

கண்ணை மூடி திறக்கும் முன் ஒரு நொடியில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. அதுவும் கொஞ்சம் லேசாக ஜம்ப் செய்து, கையை நீட்டி இந்த பந்தை பிடித்தார். இவரின் இந்த சிறப்பான கேட்சை பார்த்து நேற்று பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் எழுந்து நின்று கைதட்டினார். மொத்த பஞ்சாப் அணியின் பெவிலியனும் இவரின் அசால்ட் கேட்சை எழுந்து நின்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 13, 2021, 13:51 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+