தரமான மெசேஜ் அனுப்பிய சஞ்சு சாம்சன்.. தோனி உடனே ஏதாவது செய்யணும்.. இல்லைனா சிக்கல்தான்!
மும்பை: நேற்று சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
2021 ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட மூன்று போட்டியும் சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில் போட்டிகளாக இருந்தன.
அதிலும் நேற்று நடந்த பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டி, அதற்கு முன் நடந்த கொல்கத்தா, ஹைதராபாத் போட்டி எல்லாம் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்றது. இந்த போட்டி அனைத்திலும் விக்கெட் கீப்பர் சிறப்பாக ஆடினார்கள்.

சிறப்பு
இந்த ஐபிஎல் சீசன் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சீசனாக மாறியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் கே. எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக 91 ரன்கள் எடுத்தார். தொடக்கத்தில் இருந்து கடைசி நொடி வரை அதிரடியாக ஆடி 91 ரன்கள் எடுத்தார்.

விக்கெட் கீப்பர்
இன்னொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் ஆட்டத்தை பினிஷ் செய்தார். பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டு, அன்று வெற்றிபெற வைத்ததே ஏபிடி வில்லியர்ஸ்தான். இன்னொரு பக்கம் ஹைதராபாத் கொல்கத்தா போட்டியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினார்கள்.

பிரைஸ்டோ
ஹைதராபாத் அணிக்காக ஒரு பக்கம் பிரைஸ்டோ அதிரடியாக ஆடி அரைசதம் எடுத்தார். இன்னொரு பக்கம் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அந்த 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடக்கம். இவரின் ஸ்டிரைக் ரேட் நேற்று 244.44. நேற்று சஞ்சு சாம்சனும் அதிரடியாக ஆடினார் .

சஞ்சு
சஞ்சு சாம்சன் அதிரடியாக நேற்று 119 ரன்களை எடுத்தார். மற்ற விக்கெட் கீப்பர்கள் அதிரடியாக ஆடி வரும் நிலையில் நானும் பார்மில் இருக்கிறேன். நானும் கெத்துதான் நேற்று சஞ்சு சாம்சன் தரமாக நிரூபித்துள்ளார். இன்னொரு பக்கம் பண்ட், இஷான் கிஷானும் அதிரடியாக களத்தில் உள்ளனர். இரண்டு பேருமே முழு பார்மில் உள்ளனர்.

ஒரே ஒருவர்
இதனால் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்;. ஐபிஎல் 2021 தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் மோசமான பார்மில் இருப்பது தோனிதான். கடந்த சீசனில் இவர் சுத்தமாக சரியாக ஆடவில்லை.

முதல் மேட்ச்
கடந்த போட்டியிலும் இவர் டக் அவுட் ஆனார். மற்ற அணியில் எல்லாம் விக்கெட் கீப்பர்கள்தான் கேம் சேஞ்சர்களாக உள்ளனர். ஒரு விக்கெட் கீப்பராக தோனியும் இவர்களை போல சிஎஸ்கேவை வெற்றியை நோக்கி வழி நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications