Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ப்ளேயரை கண்டிப்பா விட்டுடாதீங்க ..நெருங்கும் ஐபிஎல் ஏலம்..ஆர்.சி.பிக்கு கவுதம் கம்பீர் அட்வைஸ்

சென்னை: ஐ.பி.எல் 14வது சீசனில் இரு அணிகளுக்கு மேக்ஸ்வெல் கண்டிப்பாக தேவைப்படுவார் என கவுதம் கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுப்பதற்கு அணிகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணிக்கு ஏலம் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 ஐ.பில். தொடர்

ஐ.பில். தொடர்

14வது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப்.18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 292 வீரர்கள் ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 விடுவிக்கப்பட்ட வீரர்கள்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

இதுவரை ஸ்டீவ் ஸ்மித், சிவம் தூபே, மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ், நாதன் கோல்டர் நைல், டாம் கரண், ஜேசன் ராய், உமேஷ் யாதவ் ஆகிய நட்சத்திர வீரர்களை அணிகள் கலட்டி விட்டுள்ளன.

 மோதும் இரு அணிகள்

மோதும் இரு அணிகள்

ஏலம் குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், இந்தாண்டு பஞ்சாப் மற்றும் ஆர்.சி.பிக்கு ஏலம் மிக முக்கியமாக இருக்கும். அவர்களின் பேட்டிங்கை வரிசையை சரிசெய்ய கிளன் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களுக்கு கண்டிப்பாக முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 ஸ்பெஷல் அட்வைஸ்

ஸ்பெஷல் அட்வைஸ்

தொடர்ந்து பேசிய கம்பீர், ஆர்.சி.பி அணி கண்டிப்பாக மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆலோசனை. கோலி, டிவில்லியர்ஸ் இருக்கும்போதும் பேட்டிங் வரிசையை சரிசெய்ய மேக்ஸ்வெல் தேவை என கூறியுள்ளார்.

 கடந்த ஆண்டு மேக்ஸ்வெல்

கடந்த ஆண்டு மேக்ஸ்வெல்

கடந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடியுள்ள மேக்ஸ்வெல் 108 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் அவர் இந்தாண்டு ஆரம்ப விலையாக ரூ.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளார்.

Story first published: Sunday, February 14, 2021, 8:26 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+