Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் அட்டவணை வெளியானது.. தொடக்கம் முதல் முடிவு வரை சூப்பர் ப்ளான்.. முழு விவரம் இதோ!

மும்பை: ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

வெளியானது மீதமுள்ள போட்டிகளுக்கான IPL Schedule.. முழு தகவல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக குதித்துள்ளது.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் குறையாத காரணத்தினால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் போட்டியே அதிரடி

முதல் போட்டியே அதிரடி

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த அணிகளை முதல் போட்டியில் மோதவிட்டால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கடைசி லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ப்ளே ஆஃப் போட்டிகள்

ப்ளே ஆஃப் போட்டிகள்

ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆட்ட விவரம்

ஆட்ட விவரம்

மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

திட்டம் என்ன?

திட்டம் என்ன?

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

Story first published: Sunday, July 25, 2021, 21:55 [IST]
Other articles published on Jul 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+