Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிளம்பிய சர்ச்சை.. கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி.. கிறிஸ் லின் வெளியிட்ட பகிர் தகவல்!

மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பிசிசிஐ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 1 முதல் தடுப்பூசி

மே 1 முதல் தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களும் மே 1ம் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

முக்கிய கேள்வி

முக்கிய கேள்வி

தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருவதால், அயல்நாட்டு வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஆனால் இந்திய வீரர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதுவும் வீரர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே செலுத்தப்படும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் லின்

கிறிஸ் லின்

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் லின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார். அதில் ஐபிஎல்-ல் பங்கேற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அடுத்த வாரத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும். எனவே எந்த ஆபத்தும் கிடையாது. எங்களை தனி விமானம் மூலம் எங்களை சொந்த நாட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், வெளிநாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் கிறிஸ் லின் தனக்கு தடுப்பூசி விரைவில் போடப்படும் என அவ்வளவு உறுதியாக எப்படி கூறுவார் என சர்ச்சை எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடைவிதித்துள்ளது. அதன் காரணமாகவே கிறிஸ் லின் தனி விமானம் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 27, 2021, 18:51 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+