Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-கான அடுத்த பணிகள்... வெஸ்ட் இண்டீஸுடம் முக்கிய கோரிக்கை.. பிசிசிஐ-ன் மெகா ப்ளான்!

மும்பை: ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்துவதற்காக மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க தொடங்கி விட்டது.

கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எப்படியும் செப்.18ம் தேதி தொடங்கி ஆக.10ம் தேதி வரை தான் இந்த தொடர்கள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் தொடர் திட்டமிடப்பட்டுள்ள தேதிகளில் அயல்நாட்டு அணிகள் வெவ்வேறு தொடர்களுக்கு திட்டமிட்டுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அந்நாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் மற்ற நாட்டு அணிகளுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியுள்ளது.

கரீபியன் ப்ரீமியர் லீக்

கரீபியன் ப்ரீமியர் லீக்

அந்தவகையில் முதற்கட்டமாக வெஸ்ட் இண்டீஸ் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அந்நாட்டின் 'கரீபியன் ப்ரீமியர் லீக்' தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முடித்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல்-க்கு வந்தாலும், அமீரகத்தில் குறைந்தது ஒரு வாரம் குவாரண்டைன் இருக்க வேண்டும். இதனால் பாதி போட்டிகளில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

பிசிசிஐ கோரிக்கை

பிசிசிஐ கோரிக்கை

இதனால் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரை 10 நாட்கள் முன்கூட்டியே நடத்த வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலில், அனைத்து கிரிக்கெட் வாரியங்களுடனும் நல்ல நட்பு உள்ளது. எனவே அயல்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, May 29, 2021, 17:17 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+