Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரலே முறிந்தாலும்.. திரும்பி போக மாட்டேன்.. டிரெஸ்ஸிங் ரூமில் சொன்ன ஸ்டோக்ஸ்.. ப்பா தில் முடிவு

சென்னை: காயம் ஏற்பட்டு இருந்தாலும், ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற மாட்டேன் என்று பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடர் ராஜஸ்தான் அணிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாத தொடராகி உள்ளது. முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் போராடி தோல்வி அடைந்தது,

ராஜஸ்தானின் முக்கியமான பவுலர் ஆர்ச்சர் காயம் காரணமாக இன்னும் அணியில் சேரவில்லை. தற்போது மூத்த வீரர் பென் ஸ்டோக்ஸும் காயம் அடைந்துள்ளார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வெளியேறுகிறார் என்று நேற்று இரவுதான் செய்தி வெளியானது. இவரின் கையில் கடந்த பஞ்சாப் vs ராஜஸ்தான் போட்டியின் போது காயம் ஏற்பட்டது. கெயில் அடித்த பந்து ஒன்றை கேட்ச் பிடிக்க இவர் டைவ் அடித்ததில் இவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

கேட்ச்

கேட்ச்

அந்த கேட்சை பிடித்த போதே ஸ்டோக்ஸ் வலியில் துடித்து, அங்கேயே புரண்டார். பின்னர் அதே காயத்தோடு ஸ்டோக்ஸ், வெளியே எதுவும் சொல்லாமல் பேட்டிங் செய்ய வந்தார். இதனால்தான் அந்த மேட்சில் வந்த வேகத்தில் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

விரல்

விரல்

தற்போது இவரின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் 2021 தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் விளையாட ஆர்வமாக வந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது தொடரை விட்டு வெளியேற மாட்டேன் என்று அறிவித்துள்ளார். நேற்று டிரெஸ்ஸிங்கில் ரூமில் அணி நிர்வாகத்திடம் பேசிய ஸ்டாக்ஸ், எனக்கு காயம் இருக்கிறது.

தொடர் மாட்டேன்

தொடர் மாட்டேன்

ஆனால் நான் தொடரை விட்டு வெளியேற மாட்டேன். அணியில்தான் இருக்க போகிறேன். ஆட முடியாது என்று தெரியும். இருந்தாலும் இங்கிலாந்து போய் வெட்டியாக இருப்பதற்கு, ராஜஸ்தான் அணியுடன் இருந்து அவர்களுக்கு ஊக்கம் அளிப்பேன் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். அதாவது ஐபிஎல் பயோ பபுளை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா வந்தார்

இந்தியா வந்தார்

இவர் ஐபிஎல் விளையாட வேண்டும் என்று ஆர்வமாக இந்தியா வந்தார். ஆனால் ஒரே போட்டியில் காயம் காரணமாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்புவதற்கு மனம் இல்லாமல் ஸ்டோக்ஸ் அணியுடன் நீடிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 11:57 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+