Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரல் முறிந்தது.. ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்.. ராஜஸ்தானுக்கு ஷாக்.. எப்படி நடந்தது?

சென்னை: ராஜஸ்தான் அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டி கடைசி பால் வரை விறுவிறுப்பாக சென்றது. பஞ்சாப் 222 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரியான் பராக், கே. எல் ராகுல் என்று நேற்று கிட்டத்தட்ட முக்கியமான இளம் இந்திய வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் நேற்று ராஜஸ்தான் அணிக்காக சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

ராஜஸ்தான் அணிக்காக நேற்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் 1 ஓவர் வீசி 12 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. அதோடு நேற்று பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அவுட்

அவுட்

நேற்று லாங் ஆனில் பீல்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் கேட்ச் ஒன்றையும் மிஸ் செய்தார். அதன்பின் மீண்டும் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து பிடித்தார். லாங் ஆன் திசையில் வந்த பந்தை வேகமாக ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் பிடித்தார்.

கேட்ச்

கேட்ச்

இந்த பந்தை பிடித்த போதே, முகத்தை சுளித்து, கையை பிடித்துக்கொண்டே பென் ஸ்டோக்ஸ் எழுந்தார். இவரின் கையில் அப்போதே காயம் ஏற்பட்டது. உள் காயம் ஏற்பட்டதால் பெரிதாக வலியை காட்டிக்கொள்ளாமல் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங் செய்தார்.

சோதனை

சோதனை

இந்த நிலையில் நேற்று போட்டிக்கு பின்பும் அவருக்கு வலி அதிகம் இருந்தது. இன்று காலையும் வலி நீடித்ததால் கையில் இவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த ஸ்கேனில் இவருக்கு கையில் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கையில் பெருவிரல் எலும்பு முறிவு முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் இவர் தொடர் முடியும் வரை அணியுடன் இருப்பார்.

ஆர்ச்சர்

ஆர்ச்சர்

ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் ஏற்கனவே காயம் அடைந்துள்ளார். இவர் முழுமையாக அணியில் இணைய சில நாட்கள் ஆகும். தற்போது இன்னொரு முக்கியமான வீரர் ஸ்டோக்ஸும் காயம் அடைந்து வெளியேறி இருப்பது ராஜஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Story first published: Tuesday, April 13, 2021, 22:47 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+