Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி நீ தேறமாட்ட.. பூரணுக்கு பதிலாக உலகின் நம்.1 வீரரை களமிறக்கும் பஞ்சாப்.. ப்ளேயிங் 11 கணிப்பு!

அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி வீரர் ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 26 லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.

 பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் கிறிஸ் கெயில் தனது பங்கிற்கு அதிரடி காட்டி ஸ்கோரை ஏற்றுகிறார். ஆனால் அந்த ஸ்கோரை எடுத்து செல்ல மிடில் ஆர்டர் சரியாக அமையவில்லை. இதனால் தொடக்கத்தில் அதிக ஸ்கோர் வந்தாலும் இறுதியில் குறைவாகிறது.

பூரண்

பூரண்

இதற்கு முக்கிய காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரண் பார்க்கப்படுகிறார். கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய பூரண், இந்த சீசனில் இதுவரை அதிகபட்சமாக 19 ரன்களே எடுத்துள்ளார். குறிப்பாக விளையாடிய 6 போட்டிகளில் 3 முறை டக் அவுட்டாகி சொதப்பியுள்ளார்.

 நம்.1 வீரர்

நம்.1 வீரர்

இதனால் இன்றைய போட்டியில் நிக்கோலஸ் பூரணுக்கு பதிலாக உலகின் நம்.1 டி20 பேட்ஸ்மேனான டேவிட் மாலனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் டேவிட் மாலன் இருந்த போதிலும், பூரண் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தனர். ஆனால் அவர் கொடுத்த ஏமாற்றத்தால் இன்று ஒரே ஒரு அதிரடி மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஹென்ரிக்யூஸ், கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங்

Story first published: Friday, April 30, 2021, 19:40 [IST]
Other articles published on Apr 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+