சாப்பாடு கூட "ஆர்டர்" பண்ண கூடாது.. வீரர்களுக்கு தடை விதித்த பிசிசிஐ.. ஐபிஎல்லில் புதிய ரூல்ஸ்!
சென்னை: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் வீரர்கள் உணவு ஆர்டர் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினமும் 3.6 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் இப்படி ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் எப்போதும் போல நடந்து வருகிறது. குறைவான மைதானங்களில் மக்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.

எப்படி
அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களால் தற்போது ஐபிஎல் ஆடும் வீரர்கள் இடையே பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. இப்படி உயரும் கொரோனா கேஸ்களுக்கு இடையே கிரிக்கெட் ஆட வேண்டுமா என்ற குழப்பத்தில் வீரர்கள் உள்ளனர். இதனால் ஆடம் சாம்பா, ஆண்ட்ரு டை, அஸ்வின் போன்ற வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

ஏன்
இந்த நிலையில் வீரர்களின் பாதுகாப்பை கருதி பயோ பபுள் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. பயோ பபுளில் கூடுதலாக விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்பு வீரர்கள் உணவு ஆர்டர் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வெளியே ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.

தடை
தற்போது உணவு ஆர்டர் செய்ய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லிப்டை பயன்படுத்த தடை உள்ளிட்ட கூடுதல் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த தடைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேக்சின்
அதேபோல் வீரர்கள் வரும் மே 1ம் தேதியில் இருந்து வேக்சின் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேக்சின் பெற விருப்பம் இருந்தால் பிசிசிஐ மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இது முழுக்க முழுக்க வீரர்களின் விருப்பம் மட்டுமே என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications