Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை மொத்தமாக ஓரம் கட்ட திட்டம்.. சிஎஸ்கேவின் ஜாம்பவானை உட்கார வைக்கும் தோனி.. பரபர முடிவு?!

சென்னை: சிஎஸ்கேவில் முக்கியமான வீரர் ஒருவருக்கு இனி வரும் போட்டிகளில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் வருகின்றன.

Recommended Video

CPL 2021: DJ Bravo Team மாற்றம்! Miss செய்ய போகும் TKR | OneIndia Tamil

கடந்த ஐபிஎல் சீசனில் மோசமாக சொதப்பிய சிஎஸ்கே அணி இந்த வருடம் டேபிள் டாப்பராக மாறியுள்ளது. முக்கியமாக சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் வலிமையாக இருப்பதால் மற்ற அணிகளை வரிசையாக வீழ்த்தி டாப்பில் இருக்கிறது.

இந்த வருடம் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். அதிலும் வெளிநாட்டு பவுலர்களின் வருகை சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.

பலம்

பலம்

தற்போது சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இரண்டு போட்டியில் ஆடி உள்ள இவர் இரண்டிலும் சிஎஸ்கே அணிக்கு அதிக விக்கெட்டுகளை எடுத்தார். முக்கியமாக மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களில் லுங்கி நிகிடி நன்றாக பவுலிங் செய்கிறார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியிடம் பவுன்சர் மட்டுமே மிஸ் ஆகி இருந்தது. அதை லுங்கி சிறப்பாக செய்து வருகிறார். இவரின் வருகையால் அணியில் இனி பிராவோவிற்கு இடம் கிடைக்காது என்கிறார்கள். வெளிநாட்டு பவுலராக பிராவோவை விட லுங்கியை அதிகம் பயன்படுத்தும் முடிவில் தோனி இருக்கிறார்.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

டாப் ஆர்டரில் வெளிநாட்டு பேட்ஸ்மேன் யாராவது காயம் அடைந்தால் மட்டுமே பிராவோ உள்ளே வருவார் இல்லையென்றால் லுங்கிதான் ஆடுவார் என்று கூறப்படுகிறது. அதோடு லுங்கி சரியாக ஆடவில்லை என்றால் பெஹன்டிராப்பிற்கு தோனி வாய்ப்பு கொடுப்பார் என்கிறார்கள்.

ஸ்டைல்

ஸ்டைல்

இவரும் கிட்டத்தட்ட லுங்கி நிகிடியின் பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். இதனால் பிராவோ இனி அணியில் ஆடுவது சிரமம். சிஎஸ்கே அணி பெரும்பாலும் லுங்கி அல்லது பெஹன்டிராபை இந்த முறை அதிகம் பயன்படுத்தும் என்கிறார்கள்.

Story first published: Saturday, May 1, 2021, 12:19 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+