Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSKvsDC: சிஎஸ்கேவின் சீனியர் வீரர் இல்லையா? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..அணி நிர்வாகத்தின் அறிவிப்பு

அமீரகம்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் சீனியர் வீரர் ஒருவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியிருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த வாரம் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் இறுதிக்கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகும் கடைசி அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

அந்தவகையில் இன்று நடைபெற உள்ள 50வது லீக் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு தேர்வான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்த அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் யார் பெறுகிறார்களோ ? அவர்கள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் செல்ல வாய்ப்பு உள்ளது.

சீனியர் வீரர் இல்லையா?

சீனியர் வீரர் இல்லையா?

மேலும் இந்த போட்டியின் மூலம் எந்த அணியின் பலம் அதிகமாக இருக்கிறது என்பதும் தெரியும் என்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இப்படிபட்ட முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணியின் முக்கிய சீனியர் வீரரான ஃபாப் டூப்ளசிஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டது.

பலத்த காயம்

பலத்த காயம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் டூப்ளசிஸ் ரன் ஓடும்போது பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமான் உடன் மோதியதால் கழுத்துப்பகுதியில் நல்ல அடி வாங்கினார். இதன் காரணமாக பேட்டிங்கில் ஆட்டமிழந்து வெளியேறிய அவர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ்-இன் போது பீல்டிங் செய்ய கூட வரவில்லை. அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அந்த போட்டியில் பீல்டிங் செய்தார். எனவே இன்றைய போட்டியில் பங்குபெறுவாரா என்ற கேள்வி இருந்தது.

சிஎஸ்கே பதில்

சிஎஸ்கே பதில்

இந்நிலையில் அதற்கெல்லாம் முடிவுகட்டியுள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், டூப்ளசிஸ் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வலி குறித்து எதனையும் கூறவில்லை. எனவே டூப்ளசிஸ் விளையாடுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை எனக்கூறியுள்ளார். இது சென்னை ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

Story first published: Monday, October 4, 2021, 20:52 [IST]
Other articles published on Oct 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+