
ஆனால்
இந்திய அணிக்குள் வந்ததில் இருந்தே இந்த ஜோடி சிறப்பாக ஆடி வந்தது. இரண்டு முறை குல்தீப் ஹாட்டிரிக் விக்கெட் எடுத்தார். சாகர் பல போட்டிகளில் கேம் சேஞ்சராக இருந்தார். இதனால் அஸ்வினுக்கு கடந்த உலகக் கோப்பை தொடரில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வினும் லெக் ஸ்பின் கற்கும் அளவிற்கு நிலைமை மோசமானது.

எதிர்காலம்
இவர்கள்தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று கருதப்பட்ட போது சாஹல், குல்தீப் இருவரும் பார்ம் அவுட் ஆனார்கள். அதிலும் குல்தீப் மொத்தமாக உலகக் கோப்பை முழுக்க பார்ம் இல்லாமல் இருந்தார். இந்திய ஸ்பின் பவுலர்கள் அந்த தொடரில் சரியாக விக்கெட் எடுக்கவில்லை. அதன்பின் மற்ற போட்டிகளிலும் குல்தீப் சரியாக ஆடவில்லை.

பார்ம் இல்லை
பார்ம் இல்லாமல் தவித்த குல்தீப் 2020 ஐபிஎல்லில் ஓரம்கட்டப்பட்டார். அதன்பின் தற்போது இந்திய அணியிலும் இவர் ஓரம்கட்டப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் சாஹல் பார்மை இழந்துள்ளார். கடந்த 6 -7 மாதமாக சரியாக ஆட முடியாமல் இவர் தவித்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை, இங்கிலாந்து தொடரிலும் சரியாக ஆடவில்லை.

மீண்டும்
தற்போது ஐபிஎல் தொடரிலும் சாஹல் சொதப்பி வருகிறார். ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இவர் கஷ்டப்படுகிறார். அதோடு ரன்களையும் வாரி வழங்குகிறார். இரண்டு பேருமே புதிதாக வேரியேஷன் எதையும் கற்றுக்கொள்ளாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இந்திய அணியில் இவர்களின் கதை முடிந்தது என்றே கூறுகிறார்கள்.

கதை ஓவர்
இதனால் இந்திய அணிக்குள் தமிழக ஸ்பின் பவுலர்களான வாஷிங்க்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, முருகன் அஸ்வின் போன்ற வீரர்கள் கோலோச்ச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நிறைய ஸ்பின் பவுலர்கள் ஐபிஎல்லில் ஆடுவதால் இவர்கள் இந்திய அணியில் சாஹல், குல்தீப் ஆகியோருக்கு பதிலாக இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications