2 வருஷமா மாறவேயில்லை.. பவுண்டரி அருகே நின்று புலம்பிய ஜாம்பவான்.. மூத்த வீரருக்கு இப்படி ஒரு நிலையா?
சென்னை: பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ஜாம்பவான் வீரர் ஒருவர் நேற்று பவுலிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வென்றது. இதில் பெங்களூர் அணி வென்றாலும் அந்த அணியின் பவுலிங் கொஞ்சம் சுமாராகவே இருந்தது.

பாஸ்ட்
பாஸ்ட் பவுலர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஹர்ஷல் பட்டேல், கைலி, சிராஜ் ஆகியோர் நன்றாகவே பவுலிங் செய்தனர். ஆனால் இன்னொரு பாஸ்ட் பவுலர் டேனியல் கிறிஸ்டின் சரியாக பவுலிங் செய்யவில்லை. அதேபோல் ஸ்பின் பவுலர்களில் ஷாபாஸ் அகமதும் மிக மோசமாக நேற்று ஆடினார். இரண்டு பேருமே 10 ஓவர்களுக்கும் அதிகமாக வீசினார்கள்.

மோசம்
ஆனால் நேற்று அதிக அதிர்ச்சி அளித்தது யார் என்று பார்த்தால் அது சாஹல்தான். கடந்த சில வாரங்களாகவே சாஹல் சரியான பார்மில் இல்லை. இவரின் பவுலிங்கை வீரர்கள் எளிதாக அடிக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக ஸ்பின் பவுலர்கள் வருடம் செல்ல செல்ல புதிய வேரியேஷன்களை காட்டுவார்கள்.

சாஹல்
ஆனால் சாஹல் கடந்த இரண்டு வருடமாக கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பவுலிங் செய்கிறார். இதனால் இவர் எப்படி பவுலிங் போடுவார் என்று எளிதாக கணிக்க முடிகிறது. சாஹல் போடும் பந்து எப்படி செல்லும், எந்த நேரத்தில் எப்படி வீசுவார் என்று எளிதாக கணிக்க முடிகிறது. அதிலும் நேற்றெல்லாம் இவரின் பவுலிங் மிக மோசமாக இருந்தது.

மோசம்
நேற்று 4 ஓவர் வீசிய சாஹல் 10 ரன்களுக்கு மேல் ஒவ்வொரு ஓவரிலும் வீசினார். மொத்தம் 41 ரன்கள் கொடுத்த இவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே சாஹல் இப்படித்தான் திணறி வருகிறார். நேற்று சரியாக பவுலிங் போட முடியாமல் பவுண்டரி லைனில் சாஹல் புலம்பிக்கொண்டு இருந்தார்.

புலம்பல்
நேற்று பவுண்டரி லைன் அருகே பீல்டிங் நிற்கும் போதே இவர் பெவிலியனில் இருக்கும் வீரர்களிடம் தன்னுடைய பவுலிங் குறித்து புலம்பி உள்ளார். சரியான லைனில் போட முடியவில்லை. பழைய கிரிப் கிடைக்கவில்லை என்று கடுமையாக புலம்பி உள்ளார் என்று வர்ணனையாளர்கள் நேற்று தெரிவித்தனர். இவர் விரைவில் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications