Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்பா.. சிறப்பான ஸ்பெல்.. சேப்பாக்கத்தில் ராஜ்ஜியம் நடத்திய சாஹல்.. பார்மிற்கு திரும்பியது எப்படி?

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் வீரர் சாஹல் பார்மிற்கு திரும்பி உள்ளார்.

கடந்த இரண்டு வருடமாக லெக் ஸ்பின் பவுலர் சாஹல் சரியான பார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி இவர் மோசமாகவே ஆடி வந்தார்.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரிலும் அதற்கு பின் இங்கிலாந்து தொடரிலும் கூட சாஹல் சரியாக ஆடவில்லை. இவரின் ஸ்பின் பவுலிங்கில் வேரியேஷன் இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

முக்கியமாக சரியான லைனில் பவுலிங் செய்ய முடியாமல் சாஹல் கடுமையாக திணறினார். சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்றாலும் சாஹல் அதில் சரியாக ஆட முடியாமல் சொதப்பினார். இதனால் சாஹலின் சகாப்தம் முடிந்தது. அவ்வளவுதான் இனி இவர் ஆட மாட்டார் என்று கூறப்பட்டது.

குல்தீப்

குல்தீப்

ஏற்கனவே குல்தீப் பார்ம் ஆகிவிட்டார். இந்த நிலையில் சாஹலும் பார்ம் ஆகிவிட்டார். இதனால் இந்திய அணியில் இருந்து இருவரையும் நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அனைத்து விமர்சனங்களையும் மீறி தற்போது சாஹல் முழு பார்மிற்கு திரும்பி உள்ளார்.

பார்ம்

பார்ம்

கொல்கத்தா அணிக்கு எதிராக சாஹல் இன்று மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இருக்கிறார். சென்னை பிட்சை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மூன்று ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்துள்ளார். இன்று பெங்களூர் அணியில் குறைந்த ரன்களை கொடுத்த ஒரே வீரர் சாஹல்தான். இன்று சாஹல் வீசிய லைன், லென்த் எல்லாமே மிகவும் சிறப்பாக இருந்தது.

சாஹல்

சாஹல்

முக்கியமாக பந்தை இவர் அதிகமாக பவுன்ஸ் செய்தது கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தது. அதேபோல் நிறைய வேரியேஷனும் இன்று சாஹலிடம் இருந்தது. கடந்த இரண்டு வருடமாக இவரிடம் மிஸ்ஸான அந்த லெக் ஸ்பின் மேஜிக் இன்று சென்னை சேப்பாக்கத்தில் கைகொடுத்துள்ளது.

Story first published: Sunday, April 18, 2021, 18:52 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+