அந்த 6 ஓவர்.. என்ன நடந்தது என்றே புரியவில்லை.. ரோஹித் முதல் எல்லோரையும் குழப்பிய சம்பவம்.. பின்னணி
சென்னை: மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் செய்த பேட்டிங் ரோஹித் சர்மாவை கடுமையாக குழப்பியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை தொடக்கத்தில் அதிரடியாக ஆடினாலும், அதன்பின் கொஞ்சம் மோசமாக திணறியது.
முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவருக்கு 150/5 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி வெற்றிபெற மும்பை 151 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

அறிகுறி
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்ய காரணமே பிட்ச்தான். பிட்ச் மாறுவதால் சேர்ந்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய கஷ்டமாக இருக்கும் என்று மும்பை அணி கணித்தது. முதல் இன்னிங்சில் மும்பை பேட்டிங் செய்யுமே போதே இதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

மும்பை
மும்பை அணி பேட்டிங் செய்யும் போதே, முதல் 10 ஓவர்களுக்கு பின் ரன் எதுவும் பெரிதாக செல்லவில்லை. வலுவான மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முடியாமல் திணறினார்கள். இதனால் கண்டிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் இறங்கும் ஹைதராபாத் அணி கஷ்டப்படும் என்றே கருதப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸ்
ஆனால் இரண்டாவது இன்னிங்சின் தொடக்கத்தில் ஆட்டம் நினைத்தது போல செல்லவில்லை. தொடக்கத்தில் முதல் இரண்டு ஓவரில் ஹைதராபாத் அணி வெறும் 5 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின் பிரைஸ்டோ சிக்ஸர், பவுண்டரி என்று அடித்து வெளுத்தார். போல்ட் ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி என்று பிரைஸ்டோ ஷாக் கொடுத்தார்.

பிரைஸ்டோ
அதற்கு அடுத்து ஆடம் மில்னே ஓவரில் பிரைஸ்டோ சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து வாங்கினார். முதல் 6 ஓவரில் ஹைதராபாத் 57 ரன்கள் எடுத்து மேட்சை புரட்டி போட்டது. இதை பார்த்தது ரோஹித் முதல் மும்பை வீரர்கள் எல்லோரையும் மொத்தமாக குழம்பினார்கள். பிட்ச் ஏன் இப்படி இருக்கிறது, இரண்டாவது இன்னிங்சில் ஆட முடியாது என்றே தானே நினைத்தோம் என்று மும்பை வீரர்கள் குழம்ப தொடங்கினார்கள்.

பனி பெய்தது
ஆனால் இன்று இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் தொடங்கும் முன் அதிக அளவில் பனி பெய்தது. இந்த பனி காரணமாக பிட்ச் மாறியது. அதேபோல் பந்தும் வழுக்கியது. இதுதான் இரண்டாவது இன்னிங்சில் ஹைதராபாத் அதிரடியாக ஆட காரணம்.

ஹைதராபாத்
ஹைதராபாத் பேட்டிங் இன்னிங்சின் தொடக்கம் நினைத்தது போல இல்லாமல் அதிரடியாக அமைய இதுவே காரணம். மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவே இதை பார்த்து கொஞ்சம் குழம்பி போனார். ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் ஜெயிச்சாலும், தோற்றாலும் சென்னை பிட்ச்க்கு மும்பை அணி இன்னும் முழுமையாக பழக்கம் அடையாமல், திட்டம் வகுக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.


Click it and Unblock the Notifications