சிஎஸ்கே vs மும்பை.. முதல் போட்டியே அட்டகாசம்.. ஐபிஎல் அட்டவணையில் மெகா ப்ளான்.. அப்டேட் வெளியானது!
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியுடன் ஐபிஎல் தொடரின் 2வது பாதி தொடங்கவுள்ளதாக சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

ஐபிஎல் தொடர்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மோசமாக உள்ள காரணத்தால் ஐபிஎல் போட்டிகளை கடந்தாண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் போட்டியே அதிரடி
இந்நிலையில் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. எனவே அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட இந்த அணிகளின் மோதலுடன் ஐபிஎல்-ன் 2வது பாதி தொடங்கவிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு அட்டவணை
இதுமட்டுமல்லாமல் ப்ளே ஆஃப் போட்டிகள் அக்டோபர் 10, 11 மற்றும்ம் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 15ம் தேதி இறுதிப்போட்ட நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐபிஎல் ஏற்பாடு குழு அதிகாரி ஒருவர், இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். முழு அட்டவணை இன்னும் சில நாட்களி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

திட்டம் என்ன?
தற்போது வரை 27 போட்டிகள் மற்றும் 3 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஆனால் அமீரகத்தில் செப்டம்பரில் நல்ல வெயில் இருக்கும் என்பதால் டபுள் ஹெட்டர்ஸ்களை தவிர்க்க பிசிசிஐ யோசித்து வருகிறது. எனவே அதற்கு ஏற்றவாறு அட்டவணைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications